தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anna: சண்முகத்தால் சௌந்தரபாண்டி எடுத்த முடிவு.. பரணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Anna: சண்முகத்தால் சௌந்தரபாண்டி எடுத்த முடிவு.. பரணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Aarthi V HT Tamil

Jul 08, 2023, 02:04 PM IST

google News
அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.
அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் கையில் துப்பாக்கி உடன் வந்து பரணி மற்றும் கார்த்திக் கல்யாணத்தை சௌந்தர பாண்டி நிறுத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இந்த கல்யாணத்தை நிறுத்திய சௌந்தரபாண்டி துப்பாக்கி நீட்டி வேகமாக சூட பரணி பக்கத்தில் இருந்த பானை வெடித்து சிதறுகிறது. உடனே பரணி என்னப்பா குறி தப்பிச்சா உங்களுக்கு வயசு ஆகிடுச்சு என்று சொல்ல குறி தப்பல நான் அந்த பானையை தான் குறி வைத்தேன் என செய்கிறார்.

அதனைத் தொடர்ந்து சந்திர பண்டி கார்த்தியின் அப்பா அம்மாவை மண்டபத்தின் வெளியிலிருந்து உள்ளே அழைக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அதோடு இல்லாமல் பாக்கியத்தையும் உள்ளே வர வைக்க பரணி அதிர்ச்சி அடைகிறாள்.

பிறகு வீர வசனம் பேசும் சௌந்தரபாண்டியன் ஒரு பேப்பரை கொடுத்து படிக்க சொல்ல அதில் பரணிக்கும் காத்திருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய சம்மதம் என எழுதி இருக்கிறது. இதைப் பார்த்து எல்லோரும் ஷாக்காக சௌந்தர பாண்டி இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டதுக்கான ஒரே காரணம் சண்முகம் மட்டும் தான் என சொல்கிறார். உடனே கிளாஸ் கட்டில் காரில் வேகமாக வைத்து கிளம்பிய சௌந்தரபாண்டியை வழி மறைக்கும் சண்முகம் அவரது காலில் விழுந்து புடிச்ச வாழ்க்கையை வாழட்டும் என சொல்ல முதலில் மறுபடியும் சௌந்தரபாண்டி பிறகு என் அம்மாவால ஏற்பட்ட அசிங்கம் உங்க குடும்பத்துக்கும் ஏற்படக்கூடாது என சொல்லி சம்மதிக்க வைக்கிறான்.

ஆனால் இங்கே மண்டபத்தில் சௌந்தரபாண்டி நிச்சயம் மட்டும் தான் நடக்கும் இந்த கல்யாணம் நடக்காது என மனதுக்குள் சொல்ல பாக்கியம் 30 வருஷமா உங்க கூட வாழ்ந்து இருக்கேன் இந்த கல்யாணத்தை எப்படி நடத்தணும்னு எனக்கு தெரியும் என சொல்லிக் கொள்கிறாள். பரணி சண்முகத்திற்கு நன்றி கடன் பட்டவர்களாக அவனை பார்க்கிறாள்.

பிறகு என்னதான் இருந்தாலும் எங்க அப்பா மேல எனக்கு நம்பிக்கை கிடையாது, இந்த கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை இருந்தால் நீ தான் நல்லபடியா கல்யாணத்தை நடத்தி வைக்கணும் என சொல்கிறாள்.

எங்க வீட்டில் ரத்னா சோகமாக இருக்க அப்போது வீட்டுக்கு வரும் வைகுண்டம் என்னாச்சு? ஸ்கூல் போலையா என்று கேட்க இசக்கி அந்த ஸ்கூல்ல தான் வெங்கடேசன் வேலை பண்றாரு அதனால அக்காவுக்கு போக புடிக்கல என சொல்ல வைகுண்டம் நல்ல பையன் என்னை பார்த்து உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்று கேட்டான். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு என்ன பேச்சு என சொல்லியதாக சொல்கிறார்.

மேலும் என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லனா இந்த கல்யாணம் நிறுத்திடுவேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை