தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chinna Veedu: பாக்யராஜ் பட கதையை கேட்டுட்டு கண் கலங்கிய அமெரிக்கர்.. ஜிஎம் குமார் சொன்ன தகவல்

Chinna Veedu: பாக்யராஜ் பட கதையை கேட்டுட்டு கண் கலங்கிய அமெரிக்கர்.. ஜிஎம் குமார் சொன்ன தகவல்

Aarthi Balaji HT Tamil

Jul 05, 2024, 10:33 AM IST

google News
Chinna Veedu: பாக்யராஜ் நடித்து, இயக்கிய சின்ன வீடு படத்தின் ஆலோசனை போது நடந்த சம்பவத்தை இயக்குநர் ஜிஎம் குமார் பிரபல யூடியூப்பில் சேனலில் பேசி உள்ளார்.
Chinna Veedu: பாக்யராஜ் நடித்து, இயக்கிய சின்ன வீடு படத்தின் ஆலோசனை போது நடந்த சம்பவத்தை இயக்குநர் ஜிஎம் குமார் பிரபல யூடியூப்பில் சேனலில் பேசி உள்ளார்.

Chinna Veedu: பாக்யராஜ் நடித்து, இயக்கிய சின்ன வீடு படத்தின் ஆலோசனை போது நடந்த சம்பவத்தை இயக்குநர் ஜிஎம் குமார் பிரபல யூடியூப்பில் சேனலில் பேசி உள்ளார்.

பாக்யராஜ் நடித்து, இயக்கி சூப்பர் ஹிட்டான படங்களில் ஒன்று தான் சின்ன வீடு. பேமிலி டிராமா பாணியில் உருவாகியிருக்கும். படத்தின் தலைப்பு இரட்டை அர்த்தத்தில் இருந்தாலும், கணவன் மனைவிக்கு இடையிலான் அன்பு, பாசம் போன்ற உணர்வுகளை சொன்ன விதத்தில் அமைக்கப்பட்டிருந்த திரைக்கதையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாக்யராஜ் தனது படங்களின் திரைக்கதையில் வில்லன் என்ற தனியொரு பாத்திரத்தை வைக்காமல் கதையின் சூழ்நிலையை ஹீரோவுக்க எதிராகவும், அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதையும் வைத்தே நகரும். சின்ன வீடு படத்திலும் அதுபோல் தான் பாக்யராஜ் செய்யும் செயலே அவருக்கு எதிராக அமையை அதிலிருந்து மீளும் விதமாக கதையை அமைத்திருப்பார்.

படத்தின் முதல் பாதியில் மிகவும் ஜாலியான மனிதராகவும், பெண்டாட்டியை கேலி பேசும் கணவனாகவும் வரும் பாக்யராஜ் இரண்டாம் பாதியில் சீரியஸான நடிப்பில் கலக்கியிருப்பார். ஆண்களின் உலகம், பெண்கள் மீது ஆண்களின் பார்வை எப்படி இருக்கும் என்பதை காட்டும் விதமாக பாக்யராஜ் லூட்டி அடிப்பது கலகலப்பை வரவழைப்பதாக இருக்கும்.

கல்பானவின் கேரக்டர்

இது இப்படி என்றால், ஒரு பெண் தனது கணவன், அவன் சார்ந்தவரிகளிடம் தனது உணர்வுகளை, விருப்பத்தை எப்படி வெளிப்படுக்கிறார் என்கிற சீரியஸ் கதாபாத்திரமாக கல்பானவின் கேரக்டரும் இருக்கும். இரு துருவங்கள் போல் இருக்கும் இந்த இரு கதாபாத்திரங்களின் என்ன ஓட்டத்தை ஒன்றிணைக்கும் விதமான திரைக்கதை அமைப்பு சின்ன வீடு படத்தை சிறந்த பேமிலி படமாக மாற்றியது.

இயக்குநர் ஜிஎம் குமார் பேட்டி

இந்நிலையில் இந்த படத்தின் ஆலோசனை போது நடந்த சம்பவத்தை இயக்குநர் ஜிஎம் குமார் Touring Talkies என்ற யூடியூப்பில் சேனலில் பேசி உள்ளார்.

அவர் கூறுகையில், “ அந்த காலத்தில் எல்லாம் நாம் எதையாவது சொன்னால் கேட்பார்கள். ஆனால் இப்போது எல்லாம் நான் சொல்வதை கேட்டால் போதும் என நினைக்கிறார்கள். அதற்கு பெயர் தான் டிஸ்கஷன். இப்போது எல்லாம் கதையை திருடுகிறார்கள் என பயம் வந்துவிட்டது. நம்ம காலத்தில் எல்லாம் அது சுத்தமாக இல்லை.

கண் கலங்கிய அமெரிக்கர்

ஒரு முறை அமெரிக்கவில் காரில் சென்ற போது சின்ன வீடு கதையை என் இயக்குநர் டிரைவரிடம் சொல்ல சொன்னார். நாங்கள் சொன்ன கதையை கேட்டு காரை அப்படியே நிருத்திவிட்டான்.

கதையை கேட்டுவிட்டு சந்தோஷத்தில் காரை எடுக்கவில்லை. இது மாதிரி ஆங்கிலத்தில் படமே இல்லையே. அதை பார்த்து இயக்குநர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அது பெரிய அனுபவம். ஆங்கிலத்தில், தமிழ் கதையை சொல்வது. அமெரிக்கரிடம் சொல்வது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது என்றார்.

நன்றி: Touring Talkies

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி