தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Sanghavi: ‘இரண்டு முறை கருச்சிதைவு’ -சங்கடம் பகிர்ந்த நடிகை சங்கவி!

Actress Sanghavi: ‘இரண்டு முறை கருச்சிதைவு’ -சங்கடம் பகிர்ந்த நடிகை சங்கவி!

Jan 16, 2023, 06:10 AM IST

google News
நடிகை சங்கவி தான் இரண்டு முறை கருச்சிதைவுக்கு உள்ளான நாட்களை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். (sangavi_venkatesh_actress_ Instagram)
நடிகை சங்கவி தான் இரண்டு முறை கருச்சிதைவுக்கு உள்ளான நாட்களை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

நடிகை சங்கவி தான் இரண்டு முறை கருச்சிதைவுக்கு உள்ளான நாட்களை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

90- களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவர் நடிகை சங்கவி. 1977 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் மைசூரில் பிறந்த இவரின் இயற்பெயர் காவியா ரமேஷ். தன்னுடைய 16 வயதில் அஜித் நடித்த அமராவதி படத்தில் நடிகையாக அறிமுகமான சங்கவி அதன் பின்னர் தன்னுடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடிக்கும் பிஸியான நடிகையாக மாறினார்.

இது மட்டுமல்லாமல் ரஜினி, விஜய், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சங்கவி. திருமணம் முடிந்து அவருக்கு இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. அந்த போராட்டத்தை வெற்றிகரமாக கடந்து வந்த அவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் அந்த கஷ்டமான நாட்கள் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இதோ அவரது பேட்டி:

நடிகை சங்கவி  -கோப்புபடம்

இது குறித்து அவர் பேசும் போது, “ என்னோட கல்யாணம் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் நடந்தது. எனக்கு இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. இரண்டுமே கர்ப்பமாகி 7 வாரத்தில் நடந்தது. சோதனை செய்யும் மருத்துவர்கள் 7 ஆவது வாரம் குழந்தைக்கு இதயத்துடிப்பு இருக்கிறது என்று சொல்லுவார்கள். 8 ஆவது வாரம் வந்த உடன் குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்று சொல்வார்கள்.

முதல்முறை அதை கேட்கும் போது நான் அப்படியே நொந்து போய் விட்டேன். என்னுடைய கணவர் என்னை பராவாயில்லை என்று சமாதானம் படுத்துவார். அதன் பின்னர் யார் என்ன சொன்னாலும், அவர்கள் சொல்வதுதான் கருச்சிதைவுக்கு காரணமாக அமைந்திருக்குமோ என்று நினைக்கத்தோன்றும்; ஏன் என்னுடைய எதிரிகள் சொன்னால் கூட, அதை நான் நம்பினேன். அந்த சமயத்தில் நான் மிகவும் குற்ற உணர்வுக்கு உள்ளானேன்.

நடிகை சங்கவி  -கோப்புபடம்

முழுக்க முழுக்க நெகட்டிவாக சிந்திக்க ஆரம்பித்தேன். ஆனால் இரண்டாவது முறை அப்படியில்லை. இரண்டாவது முறை நான் கர்ப்பமாக இருந்த போது, மிகவும் கவனமாக இருந்தேன். தேவையான அனைத்தையும் முறையாக செய்தேன். ஆனால் இரண்டாவது முறையும் அதே போல 7 ஆவது வாரத்தில் கருச்சிதைவு ஏற்பட்டது; உடனே என்னுடைய கணவர் குழந்தையை தத்தெடுத்துக்கலாம் என்று கூறினார். நான் நிதானமாக இருந்தேன். ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் மீண்டும் கர்ப்பமான எனக்கு, பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு நாங்கள் ஜான்வி என்று பெயர் வைத்தோம்” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி