தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amala Paul: சத்தம் இல்லாமல் பழனி வந்து தரிசனம் செய்த அமலா பால்

Amala paul: சத்தம் இல்லாமல் பழனி வந்து தரிசனம் செய்த அமலா பால்

Aarthi V HT Tamil

Jan 30, 2023, 09:47 PM IST

google News
நடிகை அமலா பால் பழனியில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை அமலா பால் பழனியில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகை அமலா பால் பழனியில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

'நீலதம்ரா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால். தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் நுழைந்தார்.

அமலா பால் கடைசியாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறையவே தனது சொந்த தயாரிப்பில், கடாவார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அப்படம் ஹிட் அடித்தது. பலரும் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகமால் படம், நேரடியாக திரையரங்குகளில் வெளியாகி இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இவர் தற்போது மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழியில் உள்ள ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அமலா பால் தற்போது பிரசித்தி பெற்ற பழனி மலை முருகன் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்து உள்ளார். ரோப் கார் மூலம் தனது தாய் மற்றும் தனது தம்பியின் மனைவியுடன் கோயிலுக்கு அவர் சென்று உள்ளார். அங்கு அமலா பால் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் லைக்குகளை குவிந்து வருகின்றன.

முன்னதாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோயிலுக்கு அமலா பால் சமீபத்தில் சென்றுள்ளார். ஆனால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மகாதேவ் கோவிலுக்கு இந்து பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, உங்களுக்கு அனுமதி இல்லை. வேண்டுமென்றால் கோவில் முன்புள்ள அம்மனை தரிசிக்கச் சொன்னதாக அமலா பால் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமலா பால், "கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காவிட்டாலும், அம்மனின் சக்தியை உணர்ந்தேன். மனதுக்குள் அவரை வேண்டிக்கொண்டேன். 2023 ஆம் ஆண்டிலும் மதப் பாகுபாடு இன்னும் தொடர்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இந்த பாகுபாடு என்றென்றும் ஒழிய வேண்டும் என நான் நினைக்கிறேன்” என கூறி இருந்தா

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை