தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  என்றென்றும் புன்னகை! மீண்டும் சந்தித்த அலைபாயுதே ஜோடி! ஷாலினியின் ஹேப்பி போஸ்ட்!

என்றென்றும் புன்னகை! மீண்டும் சந்தித்த அலைபாயுதே ஜோடி! ஷாலினியின் ஹேப்பி போஸ்ட்!

Suguna Devi P HT Tamil

Oct 28, 2024, 12:44 PM IST

google News
அலைபாயுதே படத்தில் ஒன்றாக நடித்த மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் சமீபத்தில் சந்தித்து கொண்டனர்.
அலைபாயுதே படத்தில் ஒன்றாக நடித்த மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் சமீபத்தில் சந்தித்து கொண்டனர்.

அலைபாயுதே படத்தில் ஒன்றாக நடித்த மாதவன் மற்றும் ஷாலினி இருவரும் சமீபத்தில் சந்தித்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாகவும் கதாநாயகராகவும் பல நடிகர்கள் சாதித்துள்ளனர் .அந்த வரிசையில் முன்னணியில் இருப்பவர் நடிகை ஷாலினி, இவர் சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் ரஜினி உட்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது தங்கையாகிய ஷாம்லியும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஆவார் .குழந்தை நட்சத்திரமாக நடித்ததிற்கு பிறகு  ஹீரோயின் ஆக நடித்த அனைத்து படங்களிலும் மிகப்பெரும் வெற்றியை பெற்று தந்துள்ளார். இவரது துள்ளல் மிகுந்த பேச்சாலும், அப்பாவித் தனமான முகத்தாலும் ரசிகர்களினன் மனதை கவர்ந்தார்.  

 இவர் கதாநாயகியாக தமிழில் வெறும் ஐந்து படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் இந்த ஐந்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. விஜய்,மாதவன், அஜித் மற்றும் பிரசாந்த் என அன்றைய பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பெருமையும் இவரையே சாரும். இறுதியாக அஜித்துடன் சேர்ந்து அமர்க்களம் படத்தில் நடித்த அப்போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது நடிகர் அஜித்துடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். மேலும் இவரது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவரது இன்ஸ்ட பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் ஜோடி சேர்ந்து நடித்த அலைப்பாயுதே படத்தின் ஹீரோ மாதவனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து 24 வருடங்களுக்கு பிறகு மாதவனை சந்தித்துள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

காதலர்களின் அலைப்பாயுதே 

கடந்த 2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அலைப்பாயுதே திரைப்படம் வெளியானது. மாதவனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக அலைப்பாயுதே, பிரசாந்த் உடன் நடித்த பிரியாத வரம் வேண்டும் ஆகிய இரண்டு படங்கள் தான் திருமணத்துக்கு பின் அவர் நடிப்பில் வெளியான படங்களாகும். இதில் அலைபாயுதே படம் ஷாலினியின் கெரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாகும். தமிழ் திரையுலகில் காதல் படம் எடுக்கும் பலருக்கும் அப்படம் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. 

இரண்டாயிரத்துக்கு பின்னான காதலர்களின் பேவரைட் படமாக அலைபாயுதே இருந்து வந்தது. மணிரத்தினத்தின் வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் என படம் நெடுக காதலர்களின் உணர்வுகளையும் அவர்களுக்கு இடையில் இருக்கும் புரிதல்களையும் பிரச்சனைகளையும் தெளிவாக காட்டி இருந்தார். இதுவே அப்போது வந்த மாடர்ன் லவ் என பேசப்பட்டது. மேலும் படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றன.  இன்று வரை படத்தின் பாடல்கள் அனைத்தும் பலரின் ப்ளே லிஸ்டில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மாதவன் மற்றும் ஷாலினியின் இந்த சந்திப்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இவரது புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். தற்போது நடிகை ஷாலினி திருமணத்திற்கு பிறகு படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் மாதவனுடனான இந்த சந்திப்பு ஒருவேளை படத்தில் காண ஒரு அறிவிப்பாகவும் இருக்கலாம் என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை