Ajith to fans: சார் சொல்லாத… அண்ணா சொல்லு - ரசிகருக்கு அஜித் அன்பு கட்டளை
Nov 13, 2022, 01:28 PM IST
நடிகர் அஜித் ரசிகருக்கு அன்பு கட்டளை ஒன்றை விடுத்துள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.
படப்பிடிப்பின் போது ரசிகர்கள் அஜித்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அஜித்தை சந்தித்த ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் ‘ ஒரு நாள் ராப் சாங் படப்பிடிப்பின் போது நாங்க ஒரு நாலு பேரு ஓராம நின்னுட்டு இருந்தோம்.எங்கள் பாத்து ஏன் நின்னுட்டு இருக்கீங்க வேலை பாத்து டயர்டா இருப்பீங்கன்னு உட்காருங்கன்னு சொன்னாரு.
அதுக்கு ஏன் பக்கத்துல இருந்த பையன் பரவால சார்-னு சொன்னதுக்கு, அஜித் என்னா தெரியுமா சொன்னாரு ‘சார்-னு சொல்லாதடா அண்ணான்னு சொல்லுன்னு சொன்னாங்க’ என பதிவிட்டுள்ளார். ரசிகரின் இந்த பதிவை தல ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
டாபிக்ஸ்