“இடுப்ப மட்டும் தனியா.. ஆபாச மார்ஃபிங் எடிட்.. அப்பா பார்த்து பிரச்சினை ஆகி.. நீங்கெல்லாம் அக்கா, தங்கச்சி கூட ” -அதிதி
Oct 16, 2024, 07:43 AM IST
அக்கா தங்கச்சி கூட… சோசியல் மீடியா நெகட்டிவிட்டியை அதிதி பாலன் கையாளும் முறையைப் பற்றி பேசி இருக்கிறார்.
அதிதி பாலன் தனக்கு சமூக வலைதளங்களில் வரும் நெகட்டிவான கமெண்டுகள் பற்றி பேசி இருக்கிறார்.
இது குறித்து டேக் 1 சேனலுக்கு அண்மையில் அவர் பேசும் போது, “இன்ஸ்டாகிராமில் சிலர் இஷ்டத்துக்கு கமெண்ட் அடிக்கிறார்கள். மக்கள் கொஞ்சம் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். தேவையில்லாத மீம்களை கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். நான் தற்போது சேலை கட்டி இருக்கிறேன் என்றால், என்னுடைய அந்தரங்க பாகங்களை மட்டும் தனியாக பிரித்து, அதை கட் செய்து சோசியல் மீடியாவில் வெளியிடுகிறார்கள். இது எல்லா நடிகைகளுக்கும் நடக்கிறது.
இது உண்மையில், அருவருக்கத்தக்க ஒரு விஷயமாகும். காரணம் இதனை நிறைய குழந்தைகள் பார்க்கிறார்கள். ஆகையால் அது போன்று பதிவுகளை வெளியிடுபவர்கள் கொஞ்சம் யோசித்து அதனை வெளியிட வேண்டும்.
அப்பா பார்த்து விட்டார்
என்னைப் பற்றிய கமெண்டுகளை நான் கண்டுகொள்ளாமல் போடா என்று சொல்லிக்கொண்டு சென்று விடலாம். ஆனால், என்னுடைய வீட்டில் என்னுடைய அப்பா அதனை பார்ப்பார். அப்படி ஒரு முறை பார்த்து ஒரு கமெண்ட்டிற்கு “ என் பொண்ணு அந்த மாதிரி இல்ல” என்றும் ரிப்ளை கொடுத்திருக்கிறார்.
நான் அவரிடம் ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள். அவன் ஏதோ போட்டு போகிறான் என்பேன். ஆகையால் இந்த விஷயத்தில் பாதிக்கப்படுவது நான் மட்டுமல்ல, என்னை சுற்றியுள்ள மக்களும்,குழந்தைகளும்தான். நான் கொஞ்சம் மாடலான ஆடையை அணிந்து என்னுடைய முகத்தோடு ஒரு புகைப்படத்தை பதிவிடும் பொழுது, அந்த புகைப்படத்திற்கு நிறைய லைக் வருகிறது. ஆனால் அதற்கு கமெண்ட்களை பார்த்தால், நீங்கள் மாறிவிட்டீர்கள் உட்பட பலவை வந்து நிற்கும்.
நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் எல்லா விதமான ஆடைகளையும் அணிந்திருக்கிறேன். தற்போது சினிமாவுக்கு வந்திருக்கிறேன். இப்போது எனக்கு சேலை அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பின்னாளில் எனக்கு மாடலான ஒரு ஆடையை அணிய வேண்டும் என்று தோன்றினால் நிச்சயம் நான் அணிவேன். இதை மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்பதற்காக நான் அணியவில்லை. எனக்கு தற்போது இது சௌகரியமாக இருக்கிறது அதனால் அணிந்திருக்கிறேன்.
அந்த புகைப்படத்தை லைக் செய்யும் அதே நபர்தான் நீ ஏன் இப்படி ஆடை அணிந்து இருக்கிறாய் என்ற கேள்வியையும் கேட்கிறார். இதை நான் எப்படி புரிந்து கொள்வது. இது மட்டுமல்ல எங்களுடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்தும் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். அவர்களெல்லாம் அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? இல்லை அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்து வளர்க்கவில்லையா என்று தெரியவில்லை” என்று பேசினார்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்