'நான் அனாதை ஆனேன்' உணர்ச்சிகளைக் கொட்டிய நடிகை விசித்ரா..!
Mar 16, 2023, 11:23 AM IST
Actress Vichitra: என்னுடைய தாய், தந்தை இல்லாததால் எனக்கு அனாதை போல் உணர்வு ஏற்படுகிறது என நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக இருந்தவர்கள் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் கவர்ச்சி நடிகை விசித்ராவும் ஒருவர்.
இவர் 15 வயது ஆகும்போதே சினிமாவில் நுழைந்து விட்டார். ஆரம்ப காலத்தில் துணை நடிகராக களத்தில் இறங்கிய இவர். பின்வரும் நாட்களில் கதாநாயகி, வில்லி, டான்சர், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார்.
தற்போது பிரபல நிகழ்ச்சிக்கான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பங்கேற்று வருகிறார். திடீரென சில நாட்கள் அந்த போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அவரது நிலை குறித்து பேட்டி ஒன்றில் தெளிவாக எடுத்துரைத்தார்.
விசித்ராவின் விளக்கம்
என்னுடைய அம்மாவிற்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் வலியில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்தார். பின்னர் சில நாட்களில் உயிரிழந்து விட்டார். அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்தாலும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். என்னுடைய அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை எனக்கு ஒரு அனாதை போல் உணர்வு ஏற்படுகிறது.
என்னுடைய அப்பா முகமூடி கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். எங்கள் அப்பா இருந்த காலத்தில் முகமூடி கொள்ளை அதிகம் நடந்து வந்தன. ஒருவேளை அவர்களின் முகத்தை அவர் பார்த்து விடுவார் என்பதற்காகவே கொலை செய்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
சிறிய தவறு செய்தாலும் எனது அப்பா திட்டுவார் என்ற எண்ணம் எனக்கு இருக்கும். எனக்கு பக்க பலமாக தாய் இருந்தார். இருவரும் போன பின்னர் பேச்சுத் துணைக்கு கூட எனக்கு ஆள் இல்லை. சகோதரிகள் இருந்தாலும் அவர்கள் வெவ்வேறு இடத்தில் இருந்து வருகின்றனர்.
அப்பா இறப்பிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கடைக்கு பைக்கில் சென்றார். அப்போது பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டார். அவரது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து தொடர்ந்து அந்த காயம் பற்றி எனது தாய் பேசிக்கொண்டே இருந்தார்.
எங்கள் அப்பாவிற்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. சிறிதாக விரலில் அடிபட்டதற்கு அவ்வளவு வருந்திய என்னுடைய தாய், அவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த போது என்ன நிலைமையில் இருந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது. தற்போது வரை அது எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியாகவே உள்ளது.
இந்த மன நிலைமையில் தான் என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என வருத்தத்துடன் நடிகை விசித்ரா தெரிவித்தார்.
டாபிக்ஸ்