Vanitha Marriage: என்னது மீண்டும், மீண்டுமா.. அடுத்த திருமணத்திற்கு ரெடியான வனிதா? மாப்பிள்ளை யார்?
Oct 01, 2024, 02:49 PM IST
Vanitha Marriage: நடிகை வனிதா விஜயகுமார், நடன மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்வது போல் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
Vanitha Marriage: மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசும் நபர்கள் சிலர் மட்டுமே. அதிலும் திரைத்துறையில் ஒரு சிலர் மட்டுமே அப்படி அறிதாக இருக்கிறார்கள். அந்த பட்டியலில் முதலில் இருப்பவர் வனிதா விஜயகுமார். தன் மனதிற்கு எது சரி, எது தவறு என்று தோன்றுகிறதோ அதை அப்படியே செய்யவும், பேசவும் செய்வார். அதனால் எப்போது சர்ச்சையில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.
வனிதா விஜயகுமார் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு காரணங்களால் பலமுறை செய்திகளில் இடம் பிடித்தவர். திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அவர் தனது வாழ்க்கையில் முன்னேறினாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டவை சர்ச்சைகளாகவே இருக்கிறது.
அவர் முதன்முதலில் நடிகர் ஆகாஷை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2006ல் விவாகரத்து பெற்றார். அந்த உறவில் வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர்.
எத்தனை திருமணம் தான் நடக்குமோ?
விவாகரத்துக்குப் பிறகு மகன் ஆகாஷுடனும், மகள் வனிதாவின் பராமரிப்பிலும் உள்ளனர். பின்னர் 2007 இல் தொழிலதிபர் ஆனந்த் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் 2012 இல் பிரிந்தார். அவருக்கு அந்த உறவில் ஒரு மகளும் உண்டு. அந்த குழந்தையும் பெண்ணின் பாதுகாப்பில் வளர்கிறது. பின்னர், 2013ஆம் ஆண்டு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் வாழ்க்கையைத் தொடங்கிய வனிதா, 2017ஆம் ஆண்டு உறவில் இருந்து விலகினார்.
பின்னர், ஜூன் 2020 பீட்டர் பால் என்ற நபரை மணந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்த உறவும் முடிவுக்கு வந்தது. பீட்டர் கடந்த ஆண்டு ஏப்ரலில் காலமானார்.
அடுத்த திருமணமா?
இந்நிலையில் கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி வனிதா விஜயகுமார் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் Save The Date October 5 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இருவருக்கும் வருகிற 5 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
ஆனால் தற்போது ராபர்ட் மாஸ்டரும், வனிதா விஜயகுமாரும் சேர்ந்து மிஸ்டர் அன்ட் மிஸஸ் படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தின் விளம்பரமாக கூட இது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
திருமணம் எங்கு நடக்கிறது?
ராபர்ட் மற்றும் வனிதா ஜோடி தாங்கள் திருமணம் செய்து கொள்ளும் இடம் பற்றிய அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இது அவர்களின் பொது நபர்களுடன் இணைந்த ஒரு ஆடம்பரமான அமைப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண விழாவில் கலந்து கொள்ளும் கெஸ்ட் லிஸ்ட்கள் தொடர்பான அறிவிப்புகளை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், இதில் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், வனிதா விஜயகுமார் தனது வரவிருக்கும் திரைப்படமான, ‘ நானும் சிங்கிள் தான் ’ என்ற தலைப்பில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் சுதந்திரம் மற்றும் சுய-கண்டுபிடிப்பு ஆகியவற்றின் கருப்பொருளை ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது நடிப்பு திறமையையும் ஆழத்தையும் வெளிப்படுத்தும் என்று உறுதியளிக்கும் அதன் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டாபிக்ஸ்