வீரவணக்கம்! போர் நினைவிடத்திற்கு சென்ற சாய்பல்லவி!அமரனுக்கு முன் இதை செய்ய விரும்பினேன்!
Oct 28, 2024, 02:28 PM IST
அமரன் படத்தில் நடித்துள்ள சாய்பல்லவி தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார். இது குறித்தான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அமரன் படத்தில் நடித்துள்ள சாய்பல்லவி தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார். இது குறித்தான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள படம் அமரன். இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படம் வரும் தீபாவளி அன்று அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில நாட்களாகவே படக் குழு கலந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடித்துள்ள நடிகை சாய் பல்லவி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு இடத்திற்கு சென்றுள்ளார்.
பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா
அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதனை அடுத்து நேற்று இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் மதுரை போன்ற பெரு நகரங்களில் உள்ள முதல் நாளுக்கான அனைத்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் நிரம்பியுள்ளது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இப்படம் மற்றும் மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வெளியாக உள்ளது. இதன் காரணமாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என படக் குழுவினர் எதிர்பார்த்துள்ளனர். மேலும் இப்படம் மேஜர் முகுந்த வரதராஜனின் உண்மை உண்மையான வாழ்க்கை கதை என்பதனால் அவரது மனைவி இந்துவும் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் இப்படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
அமரனுக்கு முன்பு
சாய்பல்லவி டெல்லியில் உள்ள தேசியப் போர் நினைவிடத்திற்கு சில தினங்களுக்கு முன் சென்றிருந்தார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்தான அவரது பதிவில், 'அமரனுக்கான புரோமோசன் நிகழ்வுகளைத் தொடங்கும் முன் தேசியப் போர் நினைவிடத்தைப் பார்க்க விரும்பினேன். சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றிருந்தேன். நமக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு துணிச்சலான இதயத்தின் நினைவாக ஆயிரக்கணக்கான "செங்கல் கட்டிடங்கள்" வைக்கப்பட்டுள்ள இந்த புனித ஆலயம். மேஜர் முகுந்த் வரதராஜன் ஏசி (பி) மற்றும் சிப்பாய் விக்ரம் சிங் எஸ்சி (பி) ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் உணர்ச்சிகளால் நிறைந்திருந்தேன்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
அமரன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. மேலும் அந்த ட்ரெய்லர் வீடியோவிற்கு கோடிக்கணக்கான வியூவர்ஸ் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் அமரன் படத்தை காண ரசிகர்களும் காத்துக் கொண்டு உள்ளனர். இந்த வருட தீபாவளி ரசிகர்களுக்கு அமரன் தீபாவளியாக இருக்கப் போகிறது. மேலும் இதே நாளில் பிளடி பெக்கர் மற்றும் பிரதர் ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளது.
டாபிக்ஸ்