சொந்தக் காசில் சூனியம் வைத்து கொண்ட நடிகை.. படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படம் வைரல்
Oct 19, 2024, 09:06 PM IST
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தீவிரமாக உடற்பயிற்சி செய்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர், ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சொந்த காசில் சூனியம்
இப்படி அவர் சமீபத்தில் செய்த அதிகப்படியான ஒர்க்- அவுட் அவருக்கே தற்போது ஆபத்தாய் வந்து முடிந்துள்ளது. இவர், கடந்த 5ம் தேதி ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்து முடித்து பின் 80 கிலோ எடையை தூக்கி உடற்பயிற்சி செய்துள்ளார்.
அப்போது, அந்த அதிகப்படியான எடையை கையாள முடியாமல், முதுகில் பலமாக வலி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த சம்பவம் குறித்து அவர் சோசியல் மீடியாவில் கருத்து ஒன்றும் பதிவிட்டுள்ளார்.
படுத்த படுக்கையாக இருக்கிறேன்
அந்தப் பதிவில், நான் முட்டாள் தனமான தவறு ஒன்றை செய்துவிட்டேன். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த என்னை நானே வற்புறுத்தினேன், இதனால் நான் முன்னேற்றம் அடைவேன் என நினைத்த நிலையில், அது எனக்கு பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்திவிட்டது. கடந்த சில நாள்களாக நான் படுத்த படுக்கையாகவே இருக்கிறேன்.
மருத்துவர்கள் நான் முழுவதுமாக குணமடைய ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் ஆகும் எனக் கூறுகின்றனர். நான் விரைவில் குணமடைய வேண்டும். அதை தவிர்த்து தன்னம்பிக்கையை இழந்து ஓய்வெடுப்பது எனக்கு விருப்பம் இல்லை. இந்த சம்பவம் மூலம் எனது வாழ்க்கையில் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக்கொண்டேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
ரசிகர்கள் கருத்து
ரகுல் ப்ரீத் சிங்கின் இந்தப் பதிவைக் கண்ட ரசிகர்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு என்ன ஆனது? அவர் எப்போது நலமுடன் திரும்புவார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திரைப்படங்களில் பிஸி
கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமான ரகுல் பீரித் சிங், ஸ்பைடர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மொழி ரசிகர்களுக்கு பிரபலமானார். இதைத் தொடர்ந்து, அவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் அவருக்கு கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது. பின், நடிகர் சூர்யாவின் என்ஜிகே, மீண்டும் கார்த்தியுடன் இணைந்து தேவ், கமல் ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்தார். இவர் தமிழ் படங்களுக்கு இடையே தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
பிறந்தநாள் சமயத்தில் இப்படியா?
கடந்த அக்டோபர் 10ம் தேதி அவரது பிறந்தநாள் பார்ட்டி நடக்க இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக அவர் செய்த உடற்பயிற்சியால் உடலில் வலி ஏற்பட்டுள்ளது. இவர் இதை பெரிதும் பொருட்படுத்தாமல், அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்