தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Poorna Pregnant: கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பூர்ணா

Poorna Pregnant: கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பூர்ணா

Aarthi V HT Tamil

Jan 02, 2023, 05:03 PM IST

google News
Poorna announce pregnancy: நடிகை பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Poorna announce pregnancy: நடிகை பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Poorna announce pregnancy: நடிகை பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்தன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரை கொண்ட இவர் பூர்ணா என்றே ரசிகர்களால் அறியப்பட்டார்.

இவர் அருள்நிதி நடித்த தகராறு, சசிக்குமாரின் கொடிவீரன், ஆடுபுலி, கந்தகோட்டை, அடங்கமறு, காப்பான், தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தலைவி படத்தில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். கடைசியாக நடிகை பூர்ணா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'விசித்திரன்' படத்தில் நடித்திருந்தார். நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக அதில் நடித்துள்ளார்.

தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் வெளியாக உள்ளது. கொச்சியில் குடும்பத்தினருடன் வசித்த பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பானது. பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்தனர்.

கேரளாவை சார்ந்த மலையாள நடிகையான பூர்ணா, சானித் ஆசிப் அலி என்ற தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். சானித் ஆசிப் அலி JBS நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். துபாய் அமீரகத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்து உள்ளார். தனது குடும்பத்துடன் அவர் இதை கேக் வெட்டி கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, பூர்ணா வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் அம்மா ஆவதற்கு தயாராகி விட்டேன். என் தாய் பாட்டியாகவும், தந்தை தாத்தாவாகவும் ஆகப் போகிறார்கள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனக்கு அனைவரின் வாழ்த்துகளும் வேண்டும். எல்லோருக்கும் நன்றி" என கூறியுள்ளார்.

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டு வாக்கெடுப்பு நடத்தி உள்ளார். சிலர் ஆண் என்றும் சிலர் பெண் என்றும், ஒருவர் இரட்டை குழந்தைகள் என்றும் பதில் அளித்து உள்ளனர். பூர்ணாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி