தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Nalini: ‘கசாப்பு கடை ஆடும்.. கல்யாண பொண்ணும் ஒன்னு தான்’ -நடிகை நளினி!

Actress Nalini: ‘கசாப்பு கடை ஆடும்.. கல்யாண பொண்ணும் ஒன்னு தான்’ -நடிகை நளினி!

HT Tamil Desk HT Tamil

Apr 13, 2023, 06:30 AM IST

google News
‘திருமணத்திற்கு பின் எந்த ஆணாவது ‘இவள் தான் என் பொண்டாட்டியா வரணும்’ என்று எப்போதாவது வேண்டுவார்களா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்க’
‘திருமணத்திற்கு பின் எந்த ஆணாவது ‘இவள் தான் என் பொண்டாட்டியா வரணும்’ என்று எப்போதாவது வேண்டுவார்களா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்க’

‘திருமணத்திற்கு பின் எந்த ஆணாவது ‘இவள் தான் என் பொண்டாட்டியா வரணும்’ என்று எப்போதாவது வேண்டுவார்களா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்க’

நடிகர் ராமராஜனின் முன்னாள் மனைவியும், நடிகையுமான நளினி, சமீபத்தில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். திருமணத்திற்கு முன்பே பெண்களுக்கு மகிழ்ச்சி என்று பேசிய அவரது பேச்சு இதோ:

‘‘நல்லா குடிக்கிற கணவனா இருந்தாலும் சரி, வேலைக்கே போகாதவனா இருந்தாலும் சரி, வீட்டில மனைவி முந்தானையை பிடிச்சு சுத்துபவனாக இருந்தாலும் சரி, நாம ஏதாவது கோயிலுக்கு போறோம்னு வெச்சுக்கோங்களே, ‘சாமி, ஏழேழு ஜென்மத்துல இவன் தான் என் புருசனா’ வரணும்னு சாமி கும்பிடுவோம். ஆனால் அவன் அடிப்பான் , மிதிப்பான் எல்லாம் பண்ணுவான். வேறு வழியில்லை. ஆனாலும் பெண்கள் அவனுக்காக வேண்டுவார்கள். 

ஆனால், திருமணத்திற்கு பின் எந்த ஆணாவது ‘இவள் தான் என் பொண்டாட்டியா வரணும்’ என்று எப்போதாவது வேண்டுவார்களா? மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. மீனில் இருக்குமா முள்ளு, திருமணத்திற்கு பின் இருக்குமாம் தில்லு. 

பொண்ணுக்கு முடி நீளமாக இருக்க வேண்டும், வாய் நீளமாக இருக்க கூடாது. அப்படியென்றால் வாய் பேசாத பெண்ணை திருணம் செய்து கொள்ள வேண்டியது தானே. நாங்க என்ன பண்ணுவோம், ‘திருமணம் இருக்கு, மெகந்தி இருக்கு, சங்கீத் இருக்கு..’ என ஒரே ஆர்வமாக இருப்போம். கசாப்பு கடைக்காரனிடம் கழுத்தை நீட்டும் ஆடு போல, எங்கள் கதையும் அதோடு முடிந்துவிடும்.

திருமணத்திற்கு முன் கேவலமா சமையல் செய்தாலும் அதை அப்பா , அண்ணன், தம்பிகள் சாப்பிடும் போது மனதார பாராட்டுவார்கள். அதுவே திருமணத்திற்கு பின் கணவருக்கு பரிமாறினால், அதை சாப்பிடும் போது கணவரின் முகமே வேறு மாதிரி இருக்கும். 

எல்லாத்திலும் ஏதாவது ஒரு குறை சொல்வார்கள். எதில் தான் இவர்களை சந்தோசப்படுத்துவது, எப்படி தான் திருப்திபடுத்துவது என்பது தெரியாமல் பெண்கள் விழிக்கிறோம். வாழ்க்கையில் என்றுமே திருமணத்திற்கு முன்பு தான் சந்தோசமே தவிர, திருமணத்திற்கு பின் பெண்களுக்கு சந்தோசமே இல்லை,’’
என்று அந்த பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடிகை நளினி பேசியுள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை