Nadhiya Love Story: பேர், பணம், புகழ்.. கணவருக்கு இருந்த ஒரே சந்தேகம்.. - கண்ணியமாக நின்ற காதல் - நதியா காதல் கதை!
Oct 18, 2023, 02:07 PM IST
கடந்த 2022ம் ஆண்டு அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு நதியா அளித்த பேட்டி இது!
இது குறித்து அவர் பேசும் போது, “என்னுடைய கணவர் ஷெரிஷ் எனது வீட்டின் அருகில் தான் இருந்தார். எனக்கும் அவருக்கும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்லும் பொழுது காதல் ஏற்பட்டது. முதலில் அது ஒரு நல்ல நட்பாக தான் இருந்தது. ஆனால் மிக சீக்கிரமாகவே அது காதலாக மாறிவிட்டது.
எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நான் படங்களில் பிசியாகி விட்டேன். அவரோ வெளிநாட்டில் அவரின் படிப்பை தொடர சென்று விட்டார். அந்த காலத்தில் போனல்லாம் கிடையாது. கடிதங்கள் மூலமாகத்தான் நாங்கள் எங்களது காதலை பரிமாறிக் கொண்டோம்.
ஒரு கட்டத்தில் அந்த காதல் கடிதம் எனது அம்மாவின் கண்ணில் பட்டது. அதன் பின்னர் அப்பாவுக்கும் அந்த விஷயம் தெரிந்தது. முதலில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. காரணம், நான் வேறு மதம். அவர் வேறு மதம். எப்படி எங்களுக்குள் ஒத்துவரும் என்று பெற்றோர் கவலைப்பட்டனர். எனது பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதனால் எங்களுடைய காதலுக்கும் அவர்களிடம் கிரீன் சிக்னல் கொடுத்தார்கள்.
ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்கள். அப்போது அவர் படித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர் படித்து நல்ல வேலைக்குச் சென்றார்.
அவருக்கு வேலை கிடைத்தவுடன் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அவர் திருமணம் செய்வதற்கு முன்னால் கேட்ட ஒரே கேள்வி என்னவென்றால், அவர் என்னிடம் அந்த சினிமா வாழ்க்கைக்குள் நீங்கள் சென்று விட்டீர்கள். இனிமேல் உங்களால் மீண்டும் ஒரு சாதாரணமான வாழ்க்கையை கொண்டு செல்ல முடியுமா என்று கேட்டார்.
நான் அப்போது எல்லோருக்கும் தெரிந்த பிரபலமான நடிகையாக இருந்தேன். என்னிடம் பணம், புகழ், பெயர் என எல்லாம் இருந்தாலும், என்னுடைய குறிக்கோள் என்பது இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதிலேயே இருந்தது. அதனால், அவர் கேட்ட அடுத்த ஷனமே, நிச்சயமாக என்னால் சாதாரணமான ஒரு சாமானிய வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும் என்று சொன்னேன். அந்த நேரத்தில் நான் மிகவும் இளம் வயது கொண்டவளாக இருந்தேன். அது எனக்கு உண்மையிலேயே உதவியதாக நான் எண்ணுகிறேன். காரணம் என்னவென்றால் கொஞ்சம் தாமதப்படுத்தி இருந்தால், எல்லாமே எனக்கு வந்திருக்கும்.
நன்றாக செட்டாகி இருக்கும். அந்த நேரத்தில் ஒருவேளை மாறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஆனால் அதை என்னுடைய இளம் வயது தகர்த்து விட்டது.
இந்த காலத்தில் காதல் செய்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கிறது. காதலில் நீங்கள் ஒருவரை ஒருவர் கண்டிப்பாக மதிக்க வேண்டும். சில விஷயங்களில் நாம் விட்டுக் கொடுத்துச் சென்றுதான் ஆக வேண்டும்.
ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது; அந்த எல்லை சம்பந்தப்பட்ட நபரை பொறுத்து அமையும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் மதிக்கும் பொழுது, அந்தக்காதல் ஆனது இயல்பாகவே நன்றாகவே வந்துவிடும்.
உறவில் அவர் எனக்கு நல்ல மரியாதையும் கொடுத்தார்; எனக்கான ஒரு நல்ல இடத்தையும் கொடுத்தார். காதலில் சண்டை வருவது இயல்புதான். அந்த சண்டை வரும் பொழுது ஒருவரை ஒருவர் உட்கார்ந்து பேச வேண்டும். காரணம் என்னவென்றால் ஒருவர் மனதில் நினைப்பது, இன்னொருவருக்கு தெரியாது. உள்ளே என்ன இருக்கிறது என்பதை வெளிப்படையாக அவர்களிடம் சொல்ல வேண்டும்.” என்று பேசினார்.
நன்றி: அவள் கிளிட்ஸ்!
டாபிக்ஸ்