Actress Ineya: ‘பட்டென முடிந்து போன பப்பி லவ்.. படப்பிடிப்பிலேயே பச்சையா படுக்கைக்கு கூப்பிட்டாங்க’- வாகை சூட வா இனியா!
Oct 14, 2023, 06:12 AM IST
ஒரு அறையின் கதவை திறந்து வைத்துக்கொண்டு யாரையோ உள்ளே விட்டு, அவர் என்னை செய்து விட்டார் என்று சொன்னால் அதற்கு முழு பொறுப்பும் நாம் தான். ஆகையால், கதவை திறக்க வேண்டுமா வேண்டாமா? என்ற முடிவை நாம் தான் எடுக்க வேண்டும்.
இது குறித்து அவர் பேசும் போது, “நான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் வாகை சூடவா. அந்தப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் எனக்கு பெரிதாக கவனம் ஈர்க்கும் படங்கள் அமையவில்லை. என்னை இயக்குநர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் சரிவர பயன்படுத்தவில்லை என்பதில் எனக்கு வருத்தம் இருக்கிறது.
காரணம், என்னுள் அதிக திறமை இருக்கிறது. என்னுடைய சினிமா வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் ஒரு திரைப்படத்திற்கான ஆடிஷனுக்கு சென்று இருந்தேன். அப்போது என்னுடைய தோல் நிறம் கலராக இல்லை. அதனால், இந்தப்படத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்று சொன்னார்கள்.
நான் அப்போது மிகவும் அப்செட் ஆகி விட்டேன். காரணம், இன்று மேக்கப் என்ற ஒன்று இருக்கிறது. எந்த கதாபாத்திரம் என்றாலும், அதற்கு தகுந்தார் போல நம்மை அதில் மாற்றிக்கொள்ள முடியும். அப்படி இருக்கும் போது, என்னை ஏன் நீக்கினார்கள் என்ற கேள்வி எனக்கு எழுந்தது. நான் சினிமாவில் எந்த வித சப்போர்ட்டும் இல்லாமல் வந்தவள்.
நான் இந்தத்துறையில் வாரிசு அரசியலை சந்தித்து இருக்கிறேன். ஆனால் அதற்காக நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. காரணம் நமக்குத்திறமை இருந்தால், என்றாவது ஒரு நாள் அது பேசப்படும். என்னையும் சிலர் படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். இது போன் வழியாகவும் நடந்திருக்கிறது. சில நேரங்களில் படப்பிடிப்பில் இருக்கும் போது நடந்து இருக்கிறது.
இது சினிமாத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது. ஆனால், அதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒரு அறையின் கதவை திறந்து வைத்துக்கொண்டு யாரையோ உள்ளே விட்டு, அவர் என்னை செய்து விட்டார் என்று சொன்னால் அதற்கு முழு பொறுப்பும் நாம் தான். ஆகையால், கதவை திறக்க வேண்டுமா வேண்டாமா? என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.
எனக்கும் காதல் வாழ்க்கை இருந்தது. நான் சினிமாத்துறைக்கு நுழைவதற்கு முன்னர் ஒருவரை காதலித்தேன். ஆனால், அவர்கள் தரப்பில் சினிமாவில் இருந்து வரவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தார்கள். ஆனால் எங்கள் வீட்டில் இனியாவிற்கு திறமை இருக்கிறது. அதை அவள் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அதனால் அந்தக்காதல் ஆரம்ப கட்டத்திலேயே முடிந்து போனது.” என்று பேசினார்
நன்றி: கலாட்டா
டாபிக்ஸ்