Chaya Singh: ‘மன்மதராசா கொடுத்த பம்பர் ஹிட்;பிளாஸ்டிக் சர்ஜரியான்னு கேட்டாங்க; ஸ்கிரீனை கிழிச்சிட்டாங்க’ - சாயா சிங்!
Jul 12, 2023, 07:37 AM IST
பிரபல நடிகையான சாயா சிங் மன்மதராசா பாடல் குறித்தான அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “தமிழில் என்னுடைய முதல் திரைப்படமாக ‘திருடா திருடி’ படம் வெளியானது. அந்தப் படம் திரையரங்கில் வெளியான சமயம் நான் கேரளாவில் இருந்தேன். படம் வெளியானவுடன் எனது உதவியாளர்களுக்கு போன் செய்து மக்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்பதைக் கேட்டேன்.
திரையை கிழித்த ரசிகர்கள்
அவர்கள் ரசிகர்கள் தியேட்டரின் திரையை கிழித்து விட்டார்கள் சொன்னார்கள். உடனே நான் அய்யய்யோ என்னடா அந்த அளவுக்கு நாம் கேவலமாக நடித்து விட்டோமோ என்று நினைத்தேன்.. படப்பிடிப்பில் நாம் நன்றாகத்தானே நடித்தோம் என்ற சந்தேகம் கூட எனக்கு வந்தது..
இதைக் கேட்டவுடன் நான் மிகவும் அழுதுவிட்டேன். உடனே என்னுடைய அம்மாவுக்கு போன் செய்தேன் அவர்களிடமும் இதைச் சொல்லி அழுதேன். உடனே என்னுடைய அம்மா ஏன் அழுகிறாய்? ரசிகர்கள் மன்மதராசா பாடலை மீண்டும் ஒரு முறை போட சொன்னார்கள். ஆனால் திரையரங்கில் அது போடவில்லை.கோபத்தில் அவர்கள் திரையில் கிழித்து விட்டார்கள் அவ்வளவுதான் என்றார்.
உடனே நான் பாட்டை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்றால் இன்னொரு முறை டிக்கெட் எடுத்துவிட்டு பார்க்க வேண்டியது தானே.. அதற்கு ஏன் திரையை கிழிக்க வேண்டும் என்று கோபப்பட்டேன்..
தனுஷூக்கு காய்ச்சல்
தனுஷ் அப்போது மிகவும் ஒல்லியாக இருப்பார். மன்மத ராசா பாடல் படப்பிடிப்பின் போது அவருக்கு காய்ச்சல் வந்துவிட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு ஊசி போட்டு,மாத்திரைகள் கொடுக்கப்பட்டது; அடுத்த நாள் சிவசங்கர் மாஸ்டர் தனுஷை பக்கத்தில் அழைத்து இவனுக்கு இரண்டு இட்லிகள் எக்ஸ்ட்ரா போடுங்கள் என்று சொல்லி சாப்பிட வைத்தார். உடனே தனுஷ் ஐயோ என்னால் இவ்வளவு எல்லாம் சாப்பிட முடியாது என்று சொல்ல, இன்னும் பாடல் படப்பிடிப்பு இருக்கிறது நன்றாக சாப்பிடு.. இன்னொரு வடை போடுங்கள் என்று தனுஷை ஒரு குழந்தை போல அவர் ட்ரீட் செய்தார்.
முதலில் எனக்கு பெரிதாக டான்ஸ் ஆட தெரியாது. மன்மத ராசா பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தபோது என்னுடைய நண்பர்கள் நீ தான் இந்த பாடலில் நடனமாடினாயா? இல்லை டூப் போட்டார்களா என்று கேட்டனர். மேலும் ஏதும் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்து கொண்டாயா என்றும் கேட்டனர். அந்தப்பாடல் எனக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது.
மதுரையில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பிலிருந்து போது ஒரு தம்பதி குழந்தையோடு வந்தனர். அப்போது அந்த குழந்தையை அவர்கள் சாயா என்று அழைத்தனர். உடனே நான் ஹலோ நான் தான் சாயா என்று நான் சொன்னேன். இல்லை உங்களது பெயரை தான் நாங்கள் குழந்தைக்கு வைத்திருக்கிறோம் என்றனர். எதற்காக என்று கேட்டால் சிறுவயதில் குழந்தை சாப்பிடாது அந்த சமயத்தில் மன்மதராசாஅ பாட்டை போட்டால் குழந்தை சாப்பிடும் அதற்காகத்தான் என்று சொன்னனர்/ எனக்கு அது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது” என்றார்
டாபிக்ஸ்