HBD Bhumika : ஐஸ் என்றாலே எப்போதும் சில்லுனு ஒரு காதல் தான்.. நடிகை பூமிகா பிறந்தநாள் இன்று!
Aug 21, 2023, 05:15 AM IST
நடிகை பூமிகா பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்
நடிகை பூமிகா 2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் இந்தி திரைப்படம் 2003 இல் வெளியான தேரே நாம் ஆகும். தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூமிகா. அதனை தொடர்ந்து களவாடிய பொழுதுகள், பெண் அடிமை இல்லை,துள்ளி எழுந்தது காதல் என பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை பூமிகா சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
என்ன தான் தமிழ் சினிமாவிற்கு ஐஸ்வர்யா ராய் பல ஐஸ்வர்யா கதாபாத்திரம் வந்தாலும், இந்த ஐஸ்வை அடிச்சிக்க முடியாது என்றால் மிகையில்லை. அந்த அளவிற்கு இந்த ஐஸ்-வின் கதாபாத்திரம் கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், சண்டில்வுட் வரை அத்தனை சினிமா ரசிகர்களையும் தன்னகத்தே வைத்தது என்று சொல்லலாம். காதல் ஐஸ் மற்றும் பரத் காதல் கை கூடாது போன போது பரத் அவ்வளவு பீல் பண்ணி இருப்பார். ஆனால் சில்லுனு ஒரு காதல் ஐஸ் காதல் வாழ்க்கை கை கூடாத போது தமிழ் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்த அளவிற்கு அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்லாம். அதையும் தாண்டி சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் முன்பே வா என் அன்பே வா…
ஊனே வா உயிரே வா…
முன்பே வா என் அன்பே வா…
பூ பூவாய் பூப்போம் வா…
நான் நானா கேட்டேன் என்னை நானே…
நான் நீயா நெஞ்சம் சொன்னதே…" பாடல் என்றால் நம் நினைவுக்கு சட்டேன வருவது நம்ம ஐஸ் அதாங்க நடிகை பூமிகா தான். படத்தின் ஒருபாதியில் சாந்தமான பெண்ணாக நடித்திருக்கும் நடிகை பூமிகா, இரண்டாம் பாதியில் ஒரு மாஸ் மாடன் பெண்ணாக வந்து அல்டி பண்ணியிருப்பார். ஐஸ் என்றால் நடிகை பூமிகா, நடிகை பூமிகா என்றால் ஐஸ் என கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார்
மேலும் அவர் தெலுங்கு ஹிந்தி, மலையாளம், பஞ்சாப் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார். நடிகை பூமிகா கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை விட்டு விட்டு குடும்பம், வாழ்க்கை, பிஸினஸ் என செட்டில் ஆகிவிட்டார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூமிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இன்று இவரின் பிறந்தநாள். இன்றைய தினம் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்