HBD Thiagarajan: தமிழ் சினிமாவின் சைலண்ட் கில்லர் தியாகராஜன்
Jun 21, 2023, 05:00 AM IST
நடிகர் தியாகராஜன் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் தியாகராஜன். சென்னை மாவட்டம் 1945 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி பிறந்தார்.
தியாகராஜன் ஒரு நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இயக்கம், தயாரிப்பு என அனைத்திலும் கால் பதித்தார்.
1981 ஆம் ஆண்டு அவரது முதல் படமான 'அலைகள் ஓய்வதில்லை' வெளியானது. அதில் அவர் ஒரு முக்கியமான துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார், அந்த கதாபாத்திரத்தின் யதார்த்தமான சித்தரிப்பு அவருக்கு 'மலையூர் மம்பட்டியான்' படத்தில் மற்றொரு வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. மம்பட்டியான் மட்டும் இன்றி தீச்சட்டி கோவிந்தன் என்ற காவல் அதிகாரியின் உண்மை கதையிலும் நடித்து சிறப்பு சேர்த்தார்.
மலையாளத் திரைப்படமான, நியூ டெல்லியில் அவரது நடிப்பு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 1995 ஆம் ஆண்டு அனழகன் என்ற படத்தில் தன் மகன் பிரசாந்தை பெண் வேடத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்திற்குப் பிறகு அவர் திரைப்பட வாழ்க்கையில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்தார். அந்த சமயத்தில் அவரது மகன் பிரசாந்த் திரைப்படத் துறையில் நடிகராக வளரத் தொடங்கினார்.
இடைவேளைக்குப் பிறகு தியாகராஜன் இயக்கிய படம் அதிர்ச்சி. பூத் என்ற இந்தி திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு அதை உருவாக்கினார். அப்படம் பெரிய வெற்றியை தந்தது. மம்பட்டியான் படத்தின் ரீமேக்கை தனது மகன் பிரஷாந்தை வைத்து இயக்கினார். இருப்பினும் வசூல் அந்த அளவிற்கு வரவில்லை. இவர் சமீப காலமாக படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
மம்முட்டியான்
தியாகராஜன் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படத்தின் ரீமேக்காக வெளியானது. தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
பூவுக்குள் பூகம்பம்
தியாகராஜன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த படம் பூவுக்குள் பூகம்பம். இதில் அவருக்கு ஜோடியாக பார்வதி நடித்திருந்தார். பூவுக்குள் பூகம்பம் படம் அனைவரது பாராட்டையும் பெற்றது.
ஆணழகன்
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சுனேகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆணழகன். இப்படத்தில் பிரசாந்த் வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டின் உரிமையாளரை நம்ப வைப்பதற்காக பெண் வேடமிட்டு நடித்து இருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மாபெரும் வரவேற்பை இப்படம் பெற்று இருந்தது.
ஷாக்
தியாகராஜன் இயக்கி, தயாரித்து இருந்த படம் ஷாக். இப்படத்தில் பிரஷாந்த் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ராம் கோபால் வர்மாவின் இந்திப் படமான பூட்டின் ரீமேக்காகும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பார்க்கும் போதே இந்த படம் திகில் கிளப்பும் வகையில் அமைந்து இருக்கும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்