Lalitha Kumari: ‘காரி துப்பிட்டு வெளியே வரலாம்’ லலிதாகுமாரி ‘நச்’!
Mar 04, 2023, 06:00 AM IST
நான் வாழ்ந்த 16 வருடத்தில் எத்தனையோ சச்சரவுகள் இருந்திருக்கிறது. அதை தாண்டி தானே வாழ்ந்திருக்கோம். வாழ்க்கையை முடிக்கும் போது, குற்றச்சாட்டுகளை சொல்லி அதை நாமே கொச்சைப்படுத்திவிடக் கூடாது.
பிரகாஷ்ராஜ்யின் முன்னாள் மனைவி, நடிகை லலிதா குமாரி, சமீபத்தில் பிரபல இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை அளித்தார்.
‘‘பிரகாஷ்ராஜ் முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகிறார். அப்போ படங்களில் நடிக்க ஆரம்பிக்கவில்லை. கீதா மேடம் மூலமா பாலசந்தர் சாரை பார்க்க, அப்போ தான் வந்திருந்தார். அப்போ, சாந்திகா கூட நடித்திருந்தார். அப்போது பழக்கமாகி , 3 மாதத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. டூயட் படம் முடிந்ததும், கல்யாணம் பண்ணோம்.
16 வருசம் நன்றாக வாழ்ந்தோம். எங்களுக்குள் சின்ன விரிசல் வந்தது. இரண்டு பேருமே உட்கார்ந்து பேசினோம். எங்களுக்கு முக்கியமா தெரிந்தது, எங்கள் இரண்டு பிள்ளைகள் தான். பூஜா, மேக்னா வாழ்க்கையில் எந்த தொந்தரவும் வந்துவிடக்கூடாது என நான் ரொம்ப யோசித்தேன். அவரும் யோசித்தார்.
அதன் பின் இரண்டு பேரும் பேசி, ஒரு முடிவுக்கு வந்து, விருப்பத்தின் பேரில் விவாகரத்து பெற்றுக் கொண்டோம். எல்லாருமே, எங்கள் பிரிவு ஒரு சர்சையாக போகும் என நினைத்தார்கள். மாறி மாறி குற்றசாட்டுகளை வைப்போம் என்று கூட எண்ணினார்கள்.
நான் வாழ்ந்த வாழ்க்கையும், நான் இருந்த நேரங்களும் உண்மையானவை. அதை பிரிந்து வந்த பின் கொச்சைப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. அப்படி செய்தால், நான் வாழ்ந்தது நியாயமாகவும் இருக்காது.
நான் வாழ்ந்த 16 வருடத்தில் எத்தனையோ சச்சரவுகள் இருந்திருக்கிறது. அதை தாண்டி தானே வாழ்ந்திருக்கோம். வாழ்க்கையை முடிக்கும் போது, குற்றச்சாட்டுகளை சொல்லி அதை நாமே கொச்சைப்படுத்திவிடக் கூடாது.
சமுதாயத்திற்காக நம் அறிவை உபயோகிக்க கூடாது, நம் குடும்பத்திற்காக உபயோகிக்க வேண்டும். பிரிதல் ரெண்டு வகையாக உள்ளது. ஒன்று, சண்டை போட்டு, காரித்துப்பி சண்டை போட்டு பிரிந்து கொள்ளலாம். இன்னொன்று, அமைதியாக புரிய வைத்து , ஒருவருக்கொருவர் உணர்ந்து அல்லது உணர வைத்து பிரிந்து கொள்ளலாம்.
எங்கள் செய்திகள் பரபரப்பாகி, என் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். நாங்கள் பேசிக்கொண்டதே அப்படி தான் பேசிக்கொண்டோம். ‘ஏன் பிடிக்கவில்லை’ என்று கேட்டேன். ‘இல்லை… செட் ஆகாது’ என்று கூறுவார். அவ்வளவு தான்.
அப்பா காலத்தில் இருந்து இருப்பதால், பத்திரிக்கைக்காரர்கள் நிறைய பேர் எனக்கு உதவினார்கள். பிரகாஷ்ராஜ் எங்காவது தப்பி தவறி ஏதாவது பேசியிருந்தால், என்னிடம் போன் பண்ணி கூறுவார்கள். ‘அங்கிள், நான் சேர்ந்து வாழனும்னு நினைக்கீறங்களா? இல்லையா? தயவு செய்து இதையெல்லாம் போடாதீங்க’ என்று கோரிக்கை வைப்பேன். அவர்களும் தவிர்த்துவிடுவார்கள். அவர்களுக்கு நான் நன்றிசொல்ல வேண்டும். ஒரு சின்ன கசிவு கூட ஏற்படாமல் எனக்கு உதவியது செய்தியாளர்கள் தான்.
காம்ப்ரமைஸ் என்பது எப்போதும் ஒரு பக்கம் மட்டும் இருக்க கூடாது, இருவரிடமும் இருக்க வேண்டும். நினைத்ததும் யாரும் பிரிவதில்லை. பசங்களை தனித்து வளர்க்க, என்ன முடிவு செய்ய வேண்டும் என்பதற்கே, எனக்கு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘நாம பிரிந்திருக்கலாம், ஆனால் பசங்களுக்கு நாம தான் அம்மா, அப்பா என்பது மாறக்கூடாது’ என்பதை நான் அவரிடம் கூறினேன். அவரும் அதை புரிந்திருந்தார்.
திடீர்னு என் பையனுக்கு ஒரு நாள் வலிப்பு வந்தது. இரவில் அட்மிட் பண்ணேன். காலையில் வந்துவிடுவான் என்று காத்திருக்கிறேன். ஆனால், அவன் இப்போது இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. வலிப்பு வந்து குழந்தைகள் இறப்பார்கள் என்பதே எனக்கு அன்று தான் தெரியும். அவனுக்கு வலிப்பு வரும் அந்த 5 நிமிடத்திற்கு முன்பு வரை, எனக்கு இப்படி ஆகும் என நான் எதையும் நினைக்கவில்லை,’’
என்று அந்த பேட்டியில் லலிதாகுமாரி கூறியுள்ளார்.
டாபிக்ஸ்