தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ஒரு பறவை என் வாழ்க்கையை மாத்திடுச்சு’ நட்டியின் சுவாரஸ்ய ப்ளாஷ்பேக்!

‘ஒரு பறவை என் வாழ்க்கையை மாத்திடுச்சு’ நட்டியின் சுவாரஸ்ய ப்ளாஷ்பேக்!

Feb 09, 2023, 08:25 AM IST

google News
Natarajan Subramaniam: அப்புறம் கல்யாணத்திற்கு வீடியோ எடுக்கும் முறையெல்லாம் வந்தது. அப்புறம் விழாக்களை லைவ் செய்ய ஆரம்பித்தோம். அப்படி தான் சினிமாவிற்கு வந்தேன்.
Natarajan Subramaniam: அப்புறம் கல்யாணத்திற்கு வீடியோ எடுக்கும் முறையெல்லாம் வந்தது. அப்புறம் விழாக்களை லைவ் செய்ய ஆரம்பித்தோம். அப்படி தான் சினிமாவிற்கு வந்தேன்.

Natarajan Subramaniam: அப்புறம் கல்யாணத்திற்கு வீடியோ எடுக்கும் முறையெல்லாம் வந்தது. அப்புறம் விழாக்களை லைவ் செய்ய ஆரம்பித்தோம். அப்படி தான் சினிமாவிற்கு வந்தேன்.

ஓளிப்பதிவாளராக எண்ட்ரி ஆகி, தற்போது நடிகராக வலம் வருபவர் நட்டி என்கிற நடராஜன். ஒளிப்பதிவாளராக அவர் எண்ட்ரி ஆன சுவாரஸ்யம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நட்டி. இதோ அந்த பேட்டி:

நான் பள்ளி படிக்கும் போது, மதன் என்கிற நண்பன் எனக்கு இருந்தான். இப்போது அவன் நல்ல பொறுப்பில் இருக்கிறான். அவன், வகுப்பறைக்கு கேமரா எடுத்து வருவான். ஒரு நாள் டெஸ்க் மீது வைத்து காண்பித்துக் கொண்டிருந்தான். நான் அதை தொட முயன்றேன். 

‘டேய் டேய் தொடாதே, இதெல்லாம் உனக்கு தெரியாது’ என்று சொன்னான். ‘என்ன இவன் இப்படி சொல்றான்’ என்று ,  முதன் முதலாக கேமராவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு வந்தது. அவனிடமே கேட்டேன், அவன் விளக்கினான். 

ஒரு நண்பர் ப்ளாக் அன் ஒயிட் கேமரா ஒன்று வைத்திருந்தார். அதை வாங்கி எதார்த்தமாக ஷாட் எடுத்து பார்த்தேன். அதில் பறவை ஒன்று எதார்த்தமாக என் கேமராவில் சிக்கியது. ப்ரிண்ட் போடும் இடத்தில், ‘இது யார் எடுத்த போட்டோ’ என்று கேட்டனர். ‘தெரிந்து எடுத்தீர்களா? தெரியாமல் எடுத்தீர்களா?’ என்று கேட்டனர். நான் தான் சார் என்றேன். ‘நல்லா இருக்கு என்று பாராட்டினார்கள்.அது ஒரு நம்பிக்கை தந்தது.

ஒரு ரோல் வாங்க வேண்டுமானால் 60 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். இதை அடிப்படை தொழிலாளாக மாற்றிக்கொண்டால் அதற்கு உதவியாக இருக்கும் என என் நண்பன் ஐடியா கொடுத்தான். அருகில் ஒரு லோக்கல் கல்யாண மண்டபம் ஒன்று இருந்தது. அங்கு தான் நாங்கள் குரூப்பாக போய் கிரிக்கெட் பார்ப்போம். அந்த மேலாளர் எங்களுக்கு பரிட்சயம்.

அவர் தான், ஒரு காதுகுத்து விழாவிற்கு போட்டோ எடுக்கச் சொன்னார். அது சிறப்பாக வந்தது. அப்புறம் கல்யாணத்திற்கு வீடியோ எடுக்கும் முறையெல்லாம் வந்தது. அப்புறம் விழாக்களை லைவ் செய்ய ஆரம்பித்தோம். அப்படி தான் சினிமாவிற்கு வந்தேன். 

இந்தியில் படம் செய்து கொண்டிருந்த போது, வின்சென்ட் செல்வா சாரை சந்திக்க நேர்ந்தது. அவர் என் படங்களை பார்த்துவிட்ட, தயாரிப்பாளரை அறிமுகம் செய்து வைத்தார். அப்படி தான் யூத் படம் விஜய்க்கு பண்ணேன். அதுவே என் தமிழ் எண்ட்ரியாகுவும் மாறியது,’’
என்று அந்த பேட்டியில் நட்டி கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி