தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nagesh: கதறி அழுத கதாநாயகி.. அதுல நாகேஷ் கில்லாடி.. மிரண்ட பாலச்சந்தர்

Nagesh: கதறி அழுத கதாநாயகி.. அதுல நாகேஷ் கில்லாடி.. மிரண்ட பாலச்சந்தர்

Dec 06, 2023, 05:30 AM IST

google News
Server Sundaram Movie: கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே மக்களையும், கதாநாயகியையும் நடிகர் நாகேஷ் கதறி அழ வைத்தார்.
Server Sundaram Movie: கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே மக்களையும், கதாநாயகியையும் நடிகர் நாகேஷ் கதறி அழ வைத்தார்.

Server Sundaram Movie: கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே மக்களையும், கதாநாயகியையும் நடிகர் நாகேஷ் கதறி அழ வைத்தார்.

தமிழ் ரசிகர்களை வசியம் செய்து தன்வசம் வைத்திருந்த நடிகர்களின் ஒருவர் நகைச்சுவை நாயகன் நாகேஷ். தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த அத்தனை நடிகர்களுடனும் இவர் சேர்ந்து நடித்திருக்கின்றார். தனக்கென தனித்துவமான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை இன்று வரை வைத்திருக்கிறார் நாகேஷ்.

இவரது நடிப்பை பாராட்டாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு கதையில் இருக்கக்கூடிய சூழ்நிலைகளை புரிந்து எதார்த்தமாக நடிக்க கூடிய நடிகர்களில் ஒருவர். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பல திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நாயகனாக நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் சர்வர் சுந்தரம். இந்த திரைப்படத்தை இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கினார். முதலில் இந்த திரைப்படம் நாடகமாக எடுக்கப்பட்டது. இந்த சர்வ சுந்தரம் நாடகத்தை எழுதியதும் கே. பாலச்சந்தர் தான்.

தனது சிறப்பான உடல் மொழி மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருந்தார்நாகேஷ். மிகவும் சிரமப்பட்டு சினிமாவில் நுழைந்த கலைஞர்களில் இவரும் ஒருவர். சினிமாவில் நடித்தாலும், உச்ச நகைச்சுவை நடிகராக வளர்ந்தாலும் நாடகத்தில் நடிப்பதை இவர் தவறாமல் செய்து வந்துள்ளார்.

இயக்குனர் கே.பாலச்சந்தர் உருவாக்கிய பல நாடகங்களில் நாகேஷ் நடித்துள்ளார். அதிலிருந்து இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய நட்பு உருவாக்கி உள்ளது. நாகேஷ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கே.பாலச்சந்தர் ஒரு நாடகத்தில் நடித்துள்ளார் அதனை கண்ட நாகேஷ், தனக்கு இவர் சரியாக இருப்பார் என சிந்தித்துள்ளார்.

அன்றிலிருந்து பாலச்சந்தரை எங்கு பார்த்தாலும் நான் உங்களது குழுவில் சேர்ந்து கொள்ளலாமா என தொடர்ந்து நாகேஷ் கேட்டு வந்துள்ளார். அதே சமயம் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற திரைப்படத்தில் நாகேஷ் நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

நீங்கள் நடித்த திரைப்படம் சிறப்பாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் நீங்கள் நாடகத்தில் நடித்தால் அது எப்படி சரியாக இருக்கும் என பாலச்சந்தர் நாகேஷிடம் கேட்டுள்ளார்.

ஒருவேளை நீங்கள் என் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்றால் உங்களை முதன்மையாக வைத்து நான் ஒரு நாடகத்தை எழுத வேண்டும் என பாலச்சந்தர் கூறியுள்ளார். அப்படி, ஒரு எளிமையான நகைச்சுவை மனிதனின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சோகங்களை அடிப்படையாக வைத்து பாலச்சந்தர் எழுதிய கதை தான் சர்வர் சுந்தரம்.

நகைச்சுவை நடிகராக விளங்கக்கூடிய நாகேஷ், சீரியஸ் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பாரா? என பாலச்சந்தர் சிந்தித்துள்ளார். நாடகத்தில் நாகேஷ் நடிப்பதாக உறுதியாகி நாடகம் தொடங்கப்பட்ட நிலையில் எனக்கு அனைத்தும் மறந்து விட்டது நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என பாலச்சந்தர் நாகேஷிடம் கூறியுள்ளார். எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை என நாகேஷ் கூறியுள்ளார்.

தொடக்கத்திலேயே கையில் டபரா செட்டோடு நாகேஷ் வரும் காட்சிகளைக் கண்டு அனைவரும் ஆரவார கைதட்டல் கொடுத்துள்ளனர். நாடகத்தில் நகைச்சுவை பாத்திரமாக நாகேஷ் வரும்போது மக்கள் அனைவரும் ஆரவாரமாக ரசித்துள்ளனர். நாடகத்தில் இரண்டாம் பாதி சீரியஸாக நடிக்கும் காட்சி. இதனை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற பீதியில் பாலச்சந்தர் இருந்தார்.

இரண்டாம் பாதியில் தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்வதற்காக நாகேஷ் கையில் ஒரு பூங்கொத்தோடு செல்வார். அப்போது அந்த பெண் நான் உங்களை எனது நண்பராக தான் நினைத்தேன், காதலிக்கவில்லை என கூறிவிடுவார்.

அந்த பெண்ணின் பதிலை கேட்டு ஏமாற்றத்தோடு திரும்பி செல்லும் நாகேஷ் அருகிலிருந்த குப்பை கூடை ஒன்றை எடுத்துக் கொண்டு செல்வார். அது ஏன் எடுத்துச் சொல்கிறீர்கள் என அந்த பெண் கேட்கும் பொழுது,  எனது பூங்கொத்தை மறந்தும் இதில் போட்டு விடாதீர்கள் என நாகேஷ் கூறுவார். இதனை கேட்டு அந்த கதாநாயகி கண்ணீர் மல்க கதறி அழுவார். நாடகத்தைப் பார்த்த அனைவரும் கதறி அழுதனர்.

பாலச்சந்தருக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. அப்படி நகைச்சுவை நடிகராக இருந்தவர் சீரியஸ் கதாபாத்திரத்தை சரியான முறையில் டெலிவரி செய்து மக்கள் மத்தியில் வெற்றி பெற்றார். அதற்கு பிறகு தான் சர்வர் சுந்தரம் படமாக்கப்பட்டது. திரையரங்குகளில் வெளியான பிறகு மிகப்பெரிய பிட் அடித்தது. அதிலிருந்துதான் நாகேஷ் ஒரு ஆகச் சிறந்த கலைஞன் என அனைவரும் தெரிந்துகொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி