தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Janagaraj: ‘மாத்திரை தந்தாங்க.. சிரிக்க முடியல.. 26 கிலோ குறைஞ்சிடுச்சு.. அழுத்தம்.. மன உளைச்சல்..’ ஜனகராஜ் உருக்கம்!

Janagaraj: ‘மாத்திரை தந்தாங்க.. சிரிக்க முடியல.. 26 கிலோ குறைஞ்சிடுச்சு.. அழுத்தம்.. மன உளைச்சல்..’ ஜனகராஜ் உருக்கம்!

Sep 29, 2023, 06:30 AM IST

google News
Janagaraj: ‘அழுத்தம், அழுத்தம், அழுத்தம், மன உளைச்சல் தான் இருந்தேன்..’
Janagaraj: ‘அழுத்தம், அழுத்தம், அழுத்தம், மன உளைச்சல் தான் இருந்தேன்..’

Janagaraj: ‘அழுத்தம், அழுத்தம், அழுத்தம், மன உளைச்சல் தான் இருந்தேன்..’

80களில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ். ரஜினி, கமல் என மாறி மாறி பிஸியாக இருந்தவர், சமீபத்தில் வாய்ப்புகள் இல்லாமல் அமெரிக்கா சென்று விட்டதாக தகவல் பரவியது. அத்தனை வதந்தியையும் கேட்டுக் கொண்டு சென்னையில் வசித்து வரும் ஜனகராஜ், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:

‘‘நான் அமெரிக்கா சென்று விட்டதாக பலரும் கூறிவருகிறார்கள். நான் இதுவரை அமெரிக்கா போனதே இல்லை. எனக்கு விசாவே கிடையாது. வேண்டுமென்றால், என் பாஸ்போர்ட்டை பாருங்கள். போகாத ஒரு நாட்டுக்கு நான் போனதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல முடியும்?

சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால், இங்கே இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக நடிக்கும் வாய்ப்புகளும் வராமல் போகிறது. எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இல்லை என்றும், ரஜினி சார் என்னை வந்து பார்த்தாக எழுதுகிறார்கள். இதெல்லாம் எப்போது நடந்தது? 

எத்தனை பேர் எனக்கு போன் பண்ணி கேட்குறாங்க தெரிமா? ‘என்னங்க என்ன ஆச்சு உடம்புக்கு?’ என்று கேட்கிறார்கள். நான் எத்தனை பேரிடம் பதில் சொல்வது. கொரோனா வந்ததில் இருந்து அழுத்தம், அழுத்தம், அழுத்தம், மன உளைச்சல் தான் இருந்தேன்.  

ஒரு வழியா கோவிட் முடிந்தது. அதன் பின் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. சும்மா, உப்புக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். ‘சும்மா வந்து நடிச்சு கொடுத்துட்டு போங்க’ என்று கூப்பிட்டார்கள். நான் எப்படி பண்ண முடியும்? 

நேற்ற காது வலி வந்தது. டாக்டரிடம் போனால், அவர்கள் பரிசோதித்து விட்டு, கொஞ்சம் வேக்ஸ் இருக்கு எடுக்கலாம் என்றார்கள். சரி என்று, எடுத்துவிட்டு மாத்திரை கொடுத்திருக்கிறார்கள். என்னால் என்னுடைய சிரிப்பை சிரிக்க முடியாது. நடிக்கும் போது, அது வந்துவிடும். என் சிரிப்பு எனக்கு வராமலா போய்விடும். 

இப்போது உடல் முழுவதும் மெலிந்து விட்டது. ஒரு மணி நேரம் நடைபயிற்சி எடுக்கிறேன். குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் குறைத்தேன். 90 கிலோ இருந்தோன். இப்போ 64 கிலோவாக குறைத்திருக்கிறேன். உடல் எடை குறைத்தபின் ரிலாக்ஸா இருக்கேன். எனக்கு 68 வயதாகிவிட்டது. 

80களில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தேன். அது ஒரு டென்ஷன் லைஃப். போவோம், நடிப்போம், மறுநாள் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம். இப்போ ரிலாக்ஸா இருக்கோம். கதை கேட்க நேரம் இருக்கிறது. இப்போது எல்லா சினிமா நண்பர்களிடம் நேரம் கிடைக்கும் போது, போன் செய்து பேசுகிறேன். யார் என்று என்னால் சொல்ல முடியாது. வீட்டுக்கு வந்து போகும் அளவிற்கு இப்போது யாரும் இல்லை. 

என் மனைவி தான் என்னை ரொம்ப நல்லா பார்த்துக் கொள்கிறார். நான் எவ்வளவு டென்ஷனா வந்தாலும், என்னை ரிலாக்ஸ் ஆக்கிவிடுவார். இதுவரை வீட்டு சண்டை வந்ததே கிடையாது. என் மகன், நல்லா பார்த்துக் கொள்வான். ஒரே மகன் எனக்கு. ஜோகோவில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்,’’
என்று அந்த பேட்டியில் ஜனகராஜ் கூறியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி