Vetrimaaran Love story: கடைசி வரைக்கும் வெற்றி மாறன்தான்' - ஆர்த்தி வெற்றிமாறன் எமோஷனல் பேட்டி
Dec 14, 2023, 07:02 PM IST
அதனால் வெற்றிமாறன் கல்யாணத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்றார். நானும் ஓகே என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அம்மாவிடம் இல்லை கல்யாணம் செய்து கொள்ளே ஆக வேண்டும் என்று வற்புறுத்த கல்யாணம் செய்து கொண்டார்
பிரபல இயக்குநர் வெற்றி மாறனின் மனைவி ஆர்த்தி வெற்றிமாறன் . பல வருடங்களாக வெற்றிமாறனை காதலித்து வந்த இவர், வீட்டின் எதிர்ப்பையும் மீறி அவரை திருமணம் செய்து கொண்டார். இவர் வெற்றிமாறனுக்கும் தனக்கும் இடையே காதல் பூத்த கதையை பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து ஸ்பாட்லைட் யூடியூப் சேனலுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொடுத்த பேட்டியில்," வெற்றிமாறன் என்னிடம், படம் எடுப்பதற்கு பத்து வருடங்கள் ஆகும் என்று சொன்னபோது என் மண்டைக்குள் ஏறவே இல்லை.
அது அப்படியான வயது. அவர் இப்படி என்னிடம் சொன்னது 97, 98 காலகட்டம் ஆகும். அப்போது படம் எடுப்பதில் இவ்வளவு கஷ்டம் இருக்கும் என்றெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு படங்கள் என்றால், ரஜினி கமல் படங்கள் தான் தெரியும்.
எனக்கு கமலை மிகவும் பிடிக்கும். வெற்றி யுடன் சேர்ந்த பிறகு தான் இயக்குநர்கள் அறிமுகமானார்கள்.
இயக்குநர்களை பார்த்து படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், நான் இவரை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் மிக மிகப் பிடிவாதமாக இருந்தேன்.
நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு, இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நேரத்தில், நான் இதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒருவருக்காக 8 வருடங்கள் 10 வருடங்கள் காத்திருப்பது என்பது பெரிய விஷயமே இல்லை. நாம் காதலிக்கும் பொழுது ஒருவரை ஒருவர் சந்திப்போம்..அதன் பின்னர் அவர் அவர் வீட்டுக்கு சென்று விடுவோம்.
அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே ஒருவித இடைவெளி உருவாகும். அப்போது நாம் யோசிப்பதற்கு அதிக அளவு நேரம் கிடைக்கும்.
இதில் மிகவும் கஷ்டமான விஷயம் என்னவென்றால், அத்தனை வருடங்களில் எந்த சச்சரவு சண்டை வந்தாலும் ஒன்றாக இணைந்து இருப்பது தான்.
என்னை பொருத்தவரை ஒருவருடன் ஒன்றாக வாழ்வதை ஒப்பிடும்பொழுது, ஒருவருக்காக நீண்ட காலம் காத்திருப்பது என்பது ஈசி யான விஷயம் தான் ஒன்றாக இருக்கும் பொழுது நமக்கு நிறைய பொறுப்புகள் தென்படும். ஒன்றாக சேர்ந்து இருக்கும் பொழுதுதான், நிறைய பிரச்சனைகள் சண்டைகள் சச்சரவுகள் உள்ளிட்டவை வரும். அதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் வாழ்க்கையானது இருக்கிறது. இதற்கிடையே என்னுடைய வீட்டில் எனக்கு கல்யாணம் செய்து வைப்பதற்கான வேலைகளை மும்மரமாகசெய்து கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் எனக்கு வீட்டில் காதலை சொல்வதற்கு தைரியம் இல்லை. ஆனால் நான் ஒரு கடிதம் எழுதி நான் வெற்றிமாறனை காதலிக்கிறேன் என்றும் கல்யாணம் செய்தால் அவரை மட்டுமே கல்யாணம் செய்வேன் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தேன்
இதனால் என்னுடைய அப்பா கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக என்னுடன் பேசாமலேயே இருந்தார். ஆனால் நான் வெற்றிமாறனை தான் கல்யாணம் செய்வேன் என்பதில் மிக மிகப் பிடிவாதமாக இருந்தேன்.
இதனை யடுத்து வெற்றிமாறனுக்கு படம் எடுப்பதற்கான வாய்ப்பு வந்தது. அட்வான்ஸ் தொகையாக பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.
இதனையடுத்து அவர் என்னிடம் வந்து அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள். கல்யாணத்திற்கு வீட்டில் பேசிவிடு என்றார்
இதனை தொடர்ந்து நான் வீட்டில் பேசினேன். கல்யாணத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவர் இயக்குவதாக இருந்த திரைப்படம் ட்ராப் ஆவதாக அறிவிப்பு வெளியானது.
அதனால் வெற்றிமாறன் கல்யாணத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்றார். நானும் ஓகே என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அம்மாவிடம் இல்லை கல்யாணம் செய்து கொள்ளே ஆக வேண்டும் என்று வற்புறுத்த கல்யாணம் செய்து கொண்டார்
இந்த நிலையில் படம் கல்யாணத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று சொன்னார்
டாபிக்ஸ்