HBD Arjun: தயாரிப்பாளர், இயக்குநர் என நடிப்புடன் பல்துறையில் வித்தகர்.. தேசப்பற்று நிறைந்த நடிகர் அர்ஜுன் பிறந்த நாள்
Aug 15, 2024, 06:18 AM IST
Actor Arjun birthday: தயாரிப்பாளர், இயக்குநர் என நடிப்புடன் பல்துறையில் வித்தகர். ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக ஊடகங்கள் மற்றும் அவரது ரசிகர்களால் "ஆக்ஷன் கிங்" என்று அன்புடன் அழைக்கப்படும் அர்ஜுன், 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
Kollywood news: இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ரசிகர்களை ஈர்த்த ஒரு சில தென்னிந்திய நடிகர்களில் இவரும் ஒருவர். ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வர் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர்.
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்த நாள் இன்று. இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் தவிர தமிழ் திரைப்படங்களிலும், சில மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர், இயக்குநர் என நடிப்புடன் பல்துறையில் வித்தகர். ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக ஊடகங்கள் மற்றும் அவரது ரசிகர்களால் "ஆக்ஷன் கிங்" என்று அன்புடன் அழைக்கப்படும் அர்ஜுன், 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அவற்றில் பெரும்பாலானவை லீடிங் ரோல்கள். பெரும்பாலான படங்கள் ஆக்ஷன் படங்கள் தான். காவல் துறை அதிகாரி கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர். தேசப்பற்று நிறைந்த படங்களில் நடிப்பதையும் விரும்புவார்.
ரசிகர்கள் அதிகம் கொண்டவர்
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ரசிகர்களை ஈர்த்த ஒரு சில தென்னிந்திய நடிகர்களில் இவரும் ஒருவர். 12 படங்களை இயக்கியுள்ள இவர், ஏராளமான படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ளார்.
1993 ஆம் ஆண்டில், இயக்குநர் ஷங்கரின் பிளாக்பஸ்டர் படமான ஜென்டில்மேன் திரைப்படத்தில் நடித்தார். இது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, அதே நேரத்தில் அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.
குருதிப்புனில் எதார்த்த நடிப்பால் கவர்ந்தார்
இந்த நேரத்தில், ஜெய்ஹிந்த் (1994), கர்ணா (1995) மற்றும் அதிரடி திரில்லர் திரைப்படமான குருதிப்புனல் (1995) போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். குருதிப்புனல் படத்தில் அர்ஜுன் தனது கதாப்பாத்திரத்திற்காக பாராட்டைப் பெற்றார். அதே நேரத்தில் இந்த படம் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் 68-வது அகாடமி விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாகவும் நுழைந்தது.
1999 ஆம் ஆண்டில், அரசியல் அதிரடி-திரில்லர் திரைப்படமான முதல்வன் படத்தில் நடித்தார். அவரது கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும், மேலும் விருதுகளுக்கான பல பரிந்துரைகளிலும் அவரது பெயர் இடம்பெற்றது. பின்னர் முன்னணி இயக்குநர் வசந்தின் திரைப்படமான ரிதம் படத்தில் நடித்தார். அதில் அவர் ஒரு புகைப்படக் கலைஞராக நடித்தார்.
தீவிர ஆஞ்சநேயர் பக்தரான அர்ஜுன், தற்காப்பு கலையில் தேர்ந்தவர். அதனாலேயே திரைப்பட வாய்ப்பை பெற்றவர் எனலாம். தீவிர தேசப் பற்று மிக்கவர். இவரது பிறந்த தினமும் சுதந்திர தினம் அன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியக் கொடியை தனது கையில் பச்சைக் குத்திக் கொண்டிருப்பார். நடிகை நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார்.
இவருக்கு எதிராக ஸ்ருதி ஹரிஹரன் என்ற கன்னட நடிகை Me Too புகாரை அளித்தார். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த நடிகர் அர்ஜுன், அவருக்கு எதிரான அவதூறு வழக்கையும் பெங்களூரு கோர்ட்டில் தொடர்ந்தார்.
ஆக்ஷன் படங்கள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் அர்ஜுனுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
டாபிக்ஸ்