தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  G.varalakshmi Memorial Day: ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கலக்கிய பழம்பெரும் நடிகை ஜி.வரலட்சுமியின் நினைவு தினம்!

G.Varalakshmi Memorial Day: ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கலக்கிய பழம்பெரும் நடிகை ஜி.வரலட்சுமியின் நினைவு தினம்!

Marimuthu M HT Tamil

Nov 26, 2023, 05:00 AM IST

google News
பழம்பெரும் நடிகை ஜி.வரலட்சுமியின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் அவரது பங்களிப்பு குறித்து விளக்குகிறது சிறப்புக்கட்டுரை!
பழம்பெரும் நடிகை ஜி.வரலட்சுமியின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் அவரது பங்களிப்பு குறித்து விளக்குகிறது சிறப்புக்கட்டுரை!

பழம்பெரும் நடிகை ஜி.வரலட்சுமியின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் அவரது பங்களிப்பு குறித்து விளக்குகிறது சிறப்புக்கட்டுரை!

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தனது இளமைக்காலத்தில் கதாநாயகியாகவும்; திருமணத்திற்குப் பின் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த பழம்பெரும் நடிகை ஜி.வரலட்சுமி. இன்று அவரது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் அவரது பங்களிப்பு குறித்துக் காண்போம்.

யார் இந்த ஜி. வரலட்சுமி? ஆந்திர மாநிலத்தில் ஓங்கோல் மாவட்டத்தில் 1926ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, சுப்பராமய்யா என்பவரின் இரண்டாவது மகளாகப் பிறந்தவர், வரலட்சுமி. ஆரம்பக்கல்வியை குண்டூரிலுள்ள ஆங்கில வழிப்பள்ளியில் பயின்றார். சிறுவயதில் தந்தை இறந்துபோகவே, குடும்ப வறுமையின் காரணமாக தனது உறவினர் நடத்தும் நாடகக் கம்பெனியில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தனது 12 வயதில் ஆந்திராவின் ராஜமுந்திரியில் ராதா வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த வரலட்சுமியைப் பார்த்த இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் அவரது திறமையைப் பாராட்டியதோடு, சினிமாவிற்கு வரலாமே என கேட்கவும் செய்தார்.

பின் அவரது பேச்சுக்கு மதிப்பளித்து பாரிஸ்டர் பார்வதீஸம் எனும் தெலுங்கு படத்தில் நடித்தார். அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்கள் சென்னையைத் தலைமையகக் கொண்டு சென்னையிலேயே எடுக்கப்பட்டன. முதல் படத்தில் கிடைத்த பரீட்சயம், அவரை எம்.கே.ரெட்டி என்பவரிடம் அறிமுகப்படுத்த மூன்று வருடங்களில் அவரது படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார்.

பின் தமிழில் பிரகலாதா என்னும் படத்தில் நடித்தார். அதன்பின் வாய்ப்புகள் சரியாக அமையாததால் மும்பைக்குப் புலம்பெயர்ந்து சில படங்களில் பின்னணிக் குரலும் கொடுத்தார், ஜி. வரலட்சுமி. பின் தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கே.எஸ். பிரகாஷ் ராவை, தனது 15 வயதில் திருமணம் செய்துகொண்டு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயும் ஆனார்.

பின் குழந்தைகள் சற்று பெரிதானதும் 1946ல் மீண்டும் சென்னை வந்த அவர் தெலுங்கில் விந்தியாராணி, துரோகி, வாலி சுக்ரீவன் மற்றும் தமிழில் லட்சம்மா, முதலிரவு, சொப்னசுந்தரி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம்பெற்றார். ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் நடித்து வந்தார். 

இவர் 1940 மற்றும் 1950-களில் தமிழ், தெலுங்கில் கொடிகட்டிப் பறந்த அனைத்து ஹீரோவின் படங்களிலும் ஜி. வரலட்சுமி நடித்துமுடித்திருந்தார். பிற்காலத்தில் இவர் அன்பான சகோதரி கதாபாத்திரத்திலும், வில்லத்தனம் செய்யும் சகோதரியாகவும் அத்தையாகவும் நடித்து புகழ்பெற்றார். இதனால், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் படங்களில் இவருக்கு ஒரு சின்னரோல் ஆவது கிடைத்துவிடும். திடீரென அரசியலில் குதித்த ஜி.வரலட்சுமி எம்.ஜி.ஆரை சிறிது காலம் ஆதரித்தார். 

தமிழில் இவர் நடித்த சில முக்கிய படங்கள்: ஆரவல்லி,குலேபகாவலி, நல்லதங்காள் (1955), பாசவலை (1956), மறுமலர்ச்சி (1956), பத்தினி தெய்வம் (1957), அமுதவல்லி (1959), பெற்ற மனம் (1960), பொன்னான வாழ்வு (1967), ஹரிச்சந்திரா (1968) ஆகியப் படங்களில் நடித்துள்ளார். 

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் நடித்து பெயர் பெற்ற நடிகை ஜி. வரலட்சுமி  2006ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி உயிரிழந்தார். அவரது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டாலும் ஜி.வரலட்சுமியின் நடிப்பு இன்றும் பலரால் அசைபோடப்படுகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை