தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rathna Sivaraman: பிரபல செய்தி வாசிப்பாளரை நள்ளிரவில் மடக்கிய 25 வயது இளைஞன்!

Rathna Sivaraman: பிரபல செய்தி வாசிப்பாளரை நள்ளிரவில் மடக்கிய 25 வயது இளைஞன்!

Jul 25, 2023, 12:27 PM IST

google News
News Reader Rathna: உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை படுகிறேன்.. உங்கள் பதில் என்ன என்றான்.. வெலவெலத்து போய் sorry no chance.. I am already married என்றேன்.. மிகுந்த ஏமாற்றம் அவன் முகத்தில் தெரிந்தது..இருந்தாலும் சுதாரித்து கொண்டு கேட்டானே ஒரு கேள்வி!!

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் செய்தி வாசிப்பாளர்களில் ஒருவர் ரத்னா. இவர் சமீபத்தில் தன் துறையில் 28 ஆண்டுகளை கடந்துள்ளார். சுமார் 18 வருடங்கள் திரை விமர்சனங்களை செய்துள்ளார் என்ற தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இன்றும் அவர் தனது பணியை தொடர்ந்துதாலும் அவர் தனியா பிஸ்னஸ் செய்து வருகிறார். செய்தி வாசிப்பு பார்ட் டைம் ஜாப்தான். 

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாப்பாளராக இருப்பவர் ரத்னா. இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றையும் தொகுதி வழங்குவார். எப்போதும் பிஸியாக இருந்தாலும் சமீப காலங்களில் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை நள்ளிரவில் மடக்கி திருமணம் செய்த கொள்ளலாமா என்று என்று 25 வயது இளைஞர் கேட்டதாக தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது.

அதில், "1995 ஆம் ஆண்டு. முகம் தெரியும் அளவிற்கு கொஞ்சம் பிரபலமாக தொடங்கி யிருந்தேன்.. இந்த புடவையில்

Shooting முடித்து விட்டு ஒரு studio வில் புகைப்படம் எடுத்து கொண்டு வள்ளுவர் கோட்டம் வழியாக scooty யில் வீட்டுக்கு போய் க் கொண்டிருந்தேன்.

25 வயது மதிக்கத்தக்க பையன் என்னை சிக்னலில் வழிமறித்தான்..

நீங்கள் suntv ரத்னா தானே என்றான்.

ஆமாம் என்றேன்..

உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை படுகிறேன்.. உங்கள் பதில் என்ன என்றான்..

வெலவெலத்து போய் sorry no chance..

I am already married என்றேன்..

மிகுந்த ஏமாற்றம் அவன் முகத்தில் தெரிந்தது..இருந்தாலும் சுதாரித்து கொண்டு கேட்டானே ஒரு கேள்வி!!

உங்களுக்கு தங்கச்சி இருந்தா சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்கறேன்..

அடுத்த நொடியே நான் escape!!

இந்த photo வை பார்க்கும்போது அந்த பையனின் ஞாபகம் வரும்."இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை