தமிழ் செய்திகள்  /  Entertainment  /  9 Years Of Nedunchalai A Breakthrough Film For Actor Aari Arjunan

9 Years of Nedunchalai: நடிகர் ஆரிக்கு திருப்புமுனையாக அமைந்த படம்!

Manigandan K T HT Tamil

Mar 28, 2023, 06:20 AM IST

Actor Aari Arujunan: மங்காவை அடையத் துடிக்கும் மாசானமுத்து, அவரிடம் இருந்து மங்காவை காப்பாற்றும் முருகன், இவர்களுக்கு இடையே நடக்கும் பரபர திரைக்கதை தான் முழு படமும்.
Actor Aari Arujunan: மங்காவை அடையத் துடிக்கும் மாசானமுத்து, அவரிடம் இருந்து மங்காவை காப்பாற்றும் முருகன், இவர்களுக்கு இடையே நடக்கும் பரபர திரைக்கதை தான் முழு படமும்.

Actor Aari Arujunan: மங்காவை அடையத் துடிக்கும் மாசானமுத்து, அவரிடம் இருந்து மங்காவை காப்பாற்றும் முருகன், இவர்களுக்கு இடையே நடக்கும் பரபர திரைக்கதை தான் முழு படமும்.

2014ம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் தான் நெடுஞ்சாலை. ஆரி, ஷிவதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Veera Thirumagan: ஏவிஎம் நிறுவனத்தின் முதல் ஆக்‌ஷன் படம்.. பிரமாண்டமாக உருவான படம்.. 62 ஆம் ஆண்டில் வீரத்திருமகன்

Actor Manobala : இயக்குநர், நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், யூடிபர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா நினைவுநாள் இன்று!

HBD Writer Sujatha: சினிமாவிலும், இலக்கியத்திலும் முத்திரை பதித்த சுஜாதா பிறந்தநாள் இன்று

KR Vatsala: ‘10 மாசம் கழிச்சும் பிரசவ வலியே வரல.. பாதி வாழ்க்கையில விவாகரத்து..அக்காவ குறை சொல்ல முடியாது’ - KR வத்சலா!

சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியாகி இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இயக்குநர் தான் நெடுஞ்சாலை படத்தை இயக்கினார். இவரது இயக்கத்தில் பத்து தல படம் தற்போது தயாராகியுள்ளது.

பிரபல இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் நடித்த ரெட்டச்சுழி படத்தில் அறிமுகமான ஆரி, பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக காத்திருந்தார்.

அவரது நடிப்புக்குத் தீனி போடும் வகையில் அமைந்த படம் தான் நெடுஞ்சாலை. கதாநாயகியாக ஷிவதா நடித்திருந்தார்.

பிரசாந்த் நாராயணன் வில்லன் கதாபாத்திரத்திலும், தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் கதை என்ன?

நெடுஞ்சாலையில் வாகனங்களில் குறிப்பாக லாரிகளில் தொடர் திருட்டில் ஈடுபடுகிறார் தார்ப்பாய் முருகன்.

மங்கா நெடுஞ்சாலையில் உணவகத்தை நடத்தி வருகிறார். முருகனும், மங்காவும் எப்போதும் மோதிக் கொள்கின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மாசானமுத்து காவல் ஆய்வாளராக வருகிறார்.

மங்காவை அடையத் துடிக்கும் மாசானமுத்து, அவரிடம் இருந்து மங்காவை காப்பாற்றும் முருகன், இவர்களுக்கு இடையே நடக்கும் பரபர திரைக்கதை தான் முழு படமும்.

நெடுஞ்சாலை படத்தின் போஸ்டர்

நெடுஞ்சாலை அதனோரம் உள்ள உணவகம் என தமிழ் திரைப்படத்தில் புதுமையான கதையுடன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார் கிருஷ்ணா.

தார்ப்பாய் முருகனாக ஆரி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லுங்கி, பனியன், மூக்கின் வலதுபக்கத்தில் வளையம் என வித்தியாசமான தோற்றத்தில் நடித்தார்.

காவல் துறை அதிகாரியாக மிரட்டல் கதாபாத்திரத்தில் மாசானமுத்துவாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பிரசாந்த் நாராயணன். அதன்பிறகு என்னவோ தமிழில் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

தம்பி ராமையா நைடாண்டி காமெடியும் ரசிக்க வைத்தது. ஷிவதா அப்பாவி மங்கா பெண் கதாபாத்திரத்தில் பொருந்தியிருந்தார்.

தாமிரபரணியில் நீந்தி வந்த...

என் ஆவாம் பூவிலையே...

என இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் மியூசில் சேனல்களில் படம் வெளியான ஆண்டு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

நெடுஞ்சாலை படத்தில் இடம்பெற்ற காட்சிகள்

பலருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகவும் அது அமைந்தது. சத்யா அந்தப் பாடலுக்கு இசை அமைத்த விதமும், கேமிராமேன் ராஜவேலின் படமாக்கலும் அந்தப் பாடலை இன்று பார்த்தாலும் பலருக்கும் பிடிக்கும்.

1987-8-களில் நடக்கும் கதை போல் எடுக்கப்பட்ட இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஆரிக்கும், ஷிவதாவுக்கும் முக்கியமான படமாக அமைந்தது எனலாம்.

இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.