Achamillai Achamillai: அரசியல் வாழ்க்கையை நாசுக்காக வெளுத்த படம் - கே.பாலச்சந்தர் அடித்த சிக்சர் இது
May 18, 2023, 05:50 AM IST
நையாண்டி அரசியலை நாசுக்காகக் கூறிய அச்சமில்லை அச்சமில்லை திரைப்படம் இன்றுடன் வெளியாக 39 ஆண்டுகள் ஆகின்றன.
தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயமாகப் பாராட்டப்படக் கூடியவர் இயக்குநர் கே.பாலச்சந்தர். தமிழ் சினிமாவிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இவரது வாழ்வில் முக்கிய திரைப்படமாக அமைந்த படங்களில் ஒன்றுதான் அச்சமில்லை அச்சமில்லை.
இந்த திரைப்படத்தில் நடிகை சரிதா ராஜேஷ், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். நல்ல கருத்துக்களைக் கொண்ட நாயகனாக வளம் பெறக்கூடிய ராஜேஷை கதாநாயகியான சரிதா மணந்து கொள்கிறார். வாழ்க்கை இனிமையாகச் சொல்லும் நேரத்தில் திருப்புமுனையாகக் கதாநாயகன் அரசியலில் சேர்கிறார்.
அரசியல் அவரை கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டவனாக மாற்றுகிறது. அதே சமயம் வேறு பெண்ணுடன் தொடர்பையும் உருவாக்குகிறது. தன் நல்லவனாக நினைத்து திருமணம் செய்து கொண்டவர் அரசியல் புகுந்து தன்னை மாற்றிக் கொண்டு விட்டார். கட்சி கட்சியாக மாறி மிகவும் மோசமான மனநிலை கொண்டவராக மாறிவிட்டதால் குழந்தையுடன் இருக்கும் சரிதா அவரை கொலை செய்து விடுகிறார். இதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
இயக்குநர் கே பாலச்சந்தரின் சரித்திர படைப்புகளில் இந்த திரைப்படமும் ஒன்று. கொள்கை, லட்சியமான சீர்திருத்தவாதியாக வாழ்ந்த இளைஞனின் ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் பெண், காசு பணத்திற்காகப் பதவியைப் பார்த்தவுடன் சந்தர்ப்ப வாதியாக மாறியதைக் அவரது மனைவியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு படம் நகர்ந்தாலும் அந்த கால அரசியலை அவ்வளவு நகைச்சுவையாக கே.பாலச்சந்தர் எடுத்துரைத்திருப்பார்.
இந்த படத்தில் கிடைத்த இடைவெளியில் எல்லாம் அரசியல் சூழ்நிலைகளைக் கிண்டலடித்து கே பாலச்சந்தர் தனது விளையாட்டைக் காட்டி இருப்பார். அதே சமயம் இன்றைய கால அரசியல் நிலைப்பாடுகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இந்த படம் பொருந்துவது தான் மிகப்பெரிய அதிசயம். சிறந்த திரைப்படம் என நம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருது பெற்றது.
முக்கியமாக இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால் நையாண்டியாக அரசியலைக் கையாண்டிருப்பது தான். ஒரு அரசியல் காவியமாக மொத்த திரைப்படத்தையும் கே பாலச்சந்தர் நகர்த்தி இருப்பார். அதுதான் இந்த அச்சமில்லை அச்சமில்லை என்ற திரைப்படத்தின் மிகப்பெரிய பிளஸ்.
இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 39 ஆண்டுகளாகின்றன. எந்த காலகட்டத்திலும் பொருந்துவது போல இயக்குநர் கே பாலச்சந்தர் படைத்த அச்சமில்லை அச்சமில்லை திரைப்படம், தமிழ் சினிமா உள்ளவரை வாழும் என்பதில் எந்த அச்சமும் இல்லை.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்