27 Years of Kadhal Kottai : பார்க்காமலே காதல்.. நலம் நலம் அறிய ஆவல்.. காலம் கடந்து ரசிக்கப்படும் காவியம்.. காதல் கோட்டை!
Jul 12, 2023, 05:45 AM IST
27 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான 'காதல் கோட்டை' அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து காலம் கடந்து காவியமாக இருக்கிறது.
காதல் கோட்டை 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், தேவயானி, மணிவண்ணன் என பலரும் நடித்துள்ளனர். இயக்குநர் அகத்தியனின் அடையாளம் 'காதல் கோட்டை'.
பார்க்காமலே காதல் என்னும் நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயத்தை கையில் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இப்படம் காலங்கடந்து ரசிக்கப்படும் காவியமாக உருவாக்கியிருந்தார் அகத்தியன். தலைமுறைகளைக் கடந்து இன்றைக்கும் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்திலும் தன் தனித்துவம் படைப்புத்திறனைக் வெளிப்படுத்தியிருந்தார்.
இப்படம் எடுக்கும் போது வளர்ந்துவரும் நாயக நடிகராக இருந்த அஜித்துக்கு மிக முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது 'காதல் கோட்டை'. இப்படத்தில் அஜித்துக்கு சூர்யா என்ற கதாபாத்திரம். சூர்யா மீது ரசிகர்களுக்கு ஒரு நன்மதிப்பு உருவாகும் கதாபாத்திரமாக வடிவமைத்திருந்தார் அகத்தியன். கமலியாக நடித்த தேவயானி நேர்மையாக குடும்பபாகான சொந்தக் காலில் நிற்கும் பெண்ணாக சிறப்பாக நடித்திருப்பார்.
பொதுவாக பார்த்தவுடன் காதல். பழகியவுடன் காதல். மோதலுக்குப் பின் காதல், கடித வழிக் காதல், செல்போன் காதல், ஃபேஸ்புக் மூலம் காதல், இன்ஸ்டாகிராம் காதல் என காதலில் பல வகைகள் உண்டு. இந்த வரிசையில் 'பார்க்காமலே காதல்' என்னும் புதுமையான படைப்பை தைரியமாக எடுத்து 'காதல் கோட்டை' என்ற காவியத்தை உருவாக்கி அசத்தினார். 27 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான 'காதல் கோட்டை' அந்தக் காலத்தில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது.
நாயகன் சூர்யாவும் நாயகி கமலியும் அறிமுகம் என்பது ரயில் தான். தன் சான்றிதழ்களை ரயிலில் விட்டு செல்லும் கமலி அதன் முக்கிய துவத்தை உணர்ந்து பொறுப்பாக நாயகன் அதில் உள்ள விளாசத்திற்கு சான்றிதழ்களை அனுப்பி வைக்கிறார். அப்போது நாயகிக்கு சூர்யாவின் குணம் பிடித்து போக நன்றி கடிதம் எழுதிகிறார். இப்படியாகதான் காதல் கடிதம் மூலம் மலர தொடங்குகிறது.
கடிதம் வாயிலாக காதல் செய்யும் இவர்கள் நம்முடையது இதயத்தில் தொடங்கி கண்களில் நிறைவடையும் காதலாக இருக்க வேண்டும் என்று இருவரும் முடிவெடுப்பது, அதற்குப் பிறகு சந்தித்துக்கொள்ள ஏற்படும் தடைகள் இவர்தான் தான் தேடிக்கொண்டிருக்கும் காதலன் சூர்யா என அறியாமல் பல முறை சந்திக்கிறார்கள். இந்த சந்திப்புகள் யதேச்சையாக கசப்பான அனுபவங்களாக அமைகிறது.
இவர்கள் இருவரும் சந்திக்கும் போது எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை. கமலிக்கு சூர்யா கெட்டவனாகவே தெரிகிறார். இறுதியில் அந்தக் கசப்பைத் தாண்டி இருவருக்கும் இடையில் ஒரு உணர்வு தோன்றுகிறது. உச்சக்கட்ட தருணத்தில் தான் கையால் எம்ராய்டு போட்ட சட்டையை பார்த்து தான் கமலிக்கு இது சூர்யா என தெரிகிறது. பின்னர் இருவரும் இத்தனை நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தவர் என்பதை அறிந்துகொண்டு சூர்யாவும் கமலியும் வாழ்வில் இணைவது என திரைக்கதையின் ஒவ்வொரு நகர்வையும் மிக இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் இயக்கி இருப்பார் அகத்தியன்.
அதேபோல இப்படத்தில் பாடல்களும் செம ஹிட். இதில் காதலில் விழுந்த கமலி காதனுக்கு கடிதம் எழுதும் போது அதனை நினைத்து வரும் பாடாலான,
“நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா” என்ற பாடல்.
அடுத்து இடம்பெற்ற இந்த பாடல் “கவலை படாதே
சகோதரா எங்கம்மா
கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து
வைப்பா கவலை படாதே
சகோதரா” எப்போது கேட்டாலும் வைப் ஏற்படுத்தும். இப்படி இப்படம் காலம் கடந்து காவியமாக கொண்டாடப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்