Malayalam cinema: அந்த காட்சிக்கு மட்டும் 17 ரீடேக்.. தனி அறையில் தங்கும் நடிகைகளுக்கு.. ஹேமா கமிஷன் ரிப்போர்ட்
Aug 19, 2024, 08:31 PM IST
Malayalam cinema: மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆய்வு செய்த நீதிபதி ஹேமா கமிட்டியின் பரபரப்பான அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பரவலான மற்றும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் நீதிபதி ஹேமா குழு அறிக்கை வெளியிடப்பட்டது.
மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆய்வு செய்து, 2019 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவான நீதிபதி ஹேமா குழுவினர் அறிக்கையை சமர்பித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையான இது, அரசாங்கத்தால் முடக்கப்பட்டு வைக்கப்பட்டது.
ஐந்து ஆண்டுக்கு பின் வெளிவந்த உண்மை
இந்த அறிக்கையின் நகல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவர்களில் பலர், பயம் காரணமாக இது குறித்து போலீசில் புகார் அளிக்க தயங்கினர்.
"சினிமாவில் பெண்கள் சந்திக்கும் மிக மோசமான கொடுமை இது. சினிமாவில் உள்ள பெண்கள் தாங்கள் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மற்ற பெண்களிடமோ அல்லது நெருங்கிய உறவினர்களிடமோ கூட பேச மிகவும் தயங்குகிறார்கள்.
அட்ஜஸ்ட்மென்ட் செய்யத் தயாராக இருக்கும் பெண் நடிகைகள் இருக்கிறார்கள். மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யத் தயாராக இல்லாதவர்கள் வாய்ப்பு வழங்கப்படாமல் வெளியேற்றப்படுகிறார்கள். மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் கதைகளை வெளிப்படுத்தியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.
பாலியல் ரீதியாக வாய்ப்பு
சினிமாவில் நடிக்கவோ அல்லது வேறு எந்த வேலையைச் செய்யவோ ஒரு பெண் வந்தால் பாலியல் ரீதியாக சரி என்று வந்தால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சினிமாவில் வேலைக்குச் செல்லும்போது, அவர்கள் பெரும்பாலும் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் செல்கிறார்கள், ஏனெனில் சினிமாவில் வாய்ப்புடன் பாலியல் கோரிக்கை முன்வைக்கப்படுவதால், அவர்கள் பணிபுரியும் இடத்தில் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்படுகிறார்கள்.
அவர்கள் தங்கியிருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களில், சினிமாவில் பணிபுரியும் ஆண்கள் பெரும்பாலும் போதையில் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் கதவுகள் தட்டி பாலியல் சீண்டல் செய்கிறார்கள்.
வலுக்கட்டாயமாக நுழைந்த ஆண்கள்
பல சந்தர்ப்பங்களில், கதவு இடிந்து விழுந்து ஆண்கள் வலுக்கட்டாயமாக அறைக்குள் நுழைந்து இருக்கிறார்கள்.
சினிமாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பல பாலியல் செயல்கள் ஐபிசியின் கீழ் வந்தாலும், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் வரையறையின் கீழ் வந்தாலும், கொடுமைகளை அனுபவித்த பெண்கள் மௌனம் காக்கவே விரும்புகிறார்கள்.
அவர்கள் இந்த விஷயத்தை நீதிமன்றம் அல்லது காவல்துறையின் முன் கொண்டு சென்றால், அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உட்பட மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஒரு கலைஞர் மேலும் கூறினார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட இருக்கிறதாம்.
17 முறை ரீடேக்
புகார் அளித்த அடுத்த நாளே, சமூக ஊடகங்களில் கடுமையான சைபர் தாக்குதல்கள் இருந்து உள்ளது. மலையாள திரையுலகம் ஒரு கிரிமினல் கும்பலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஒரு சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள் அடங்கிய "அதிகார கூட்டணி" இருக்கிறது.
ஒரு நடிகைக்கு ஏற்கனவே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு உள்ளது. அதே நடிகர் ஒரு கட்டி பிடிக்கும் சீனை 17 முறை நடித்து காட்டி ரீடேக் வாங்கி 18 ஆவது முறை ஓகே வாங்கினாராம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டது.
அடுத்த நாள் அந்த நடிகருடன் கணவன், மனைவியாக நடிக்க வேண்டிய சூழல் எழுந்ததாம். தினமும் கட்டி பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க வைத்து கொடுமை செய்து இருக்கிறார்கள்"
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்