தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 Years Of Veeram : காதல், சண்டை, காமெடி நிறைந்த வீரம்!

10 Years of Veeram : காதல், சண்டை, காமெடி நிறைந்த வீரம்!

Priyadarshini R HT Tamil

Jan 10, 2024, 08:00 AM IST

google News
10 Years of Veeram : காதல், சண்டை, காமெடி நிறைந்த வீரம்!
10 Years of Veeram : காதல், சண்டை, காமெடி நிறைந்த வீரம்!

10 Years of Veeram : காதல், சண்டை, காமெடி நிறைந்த வீரம்!

வீரம், ரொமான்டிக் ஆக்சன் காமெடி திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் சிவா நடித்துள்ளார். விஜயா ப்ரொடன்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஜித் குமார் மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விதார்த், பாலா, சந்தானம், பிரதீப் ராவத், நாசர் மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படம் 2014ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளியானது.

இந்தப்படம் தெலுங்கில் கட்டாமராயுடு என்ற பெயரில் வெளியானது. ஒடேயா என்ற பெயரில் கன்னடத்திலும், கிசிகாபாய் கிசிகிஜான் என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது.

விநாயகம் தனது 4 சகோதரர்களுடன் வசித்து வருவார். அவர்கள் அடிக்கடி பிரச்னைகளில் மாட்டிக்கொள்வார்கள். இதனால், அவர்களை ஜாமீனில் எடுக்க பெயில் பெருமாள் என்ற ஒரு வழக்கறிஞரை வைத்திருப்பார்கள். இந்த கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருப்பார். 

விநாயகத்துக்கு திருமணம் என்றாலே பிடிக்காது. திருமணம் செய்துகொண்டால் தனது மனைவி சகோதரர்களை பிரித்துவிடுவார் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதனால், அவரது சகோதரர்களும் திருமணத்துக்கு மறுத்து வந்தனர். ஆனால் அனைவருக்குமே ரகசிய காதலிகள் இருந்தனர்.

இந்நிலையில், விநாயகம் சிறு வயதில் கோப்பெருந்தேவி என்ற பெண்ணை காதலித்தார் என்பதை அவரது நண்பர் கலெக்டர் சுப்பு மூலம் அவரது சகோதரர்கள் தெரிந்துகொண்டு அந்தப்பெண்ணை தேடிச் செல்வார்கள். ஆனால் அவருக்கு திருமணம் முடிந்திருக்கும். எனினும் அந்தப்பெண்ணைவிட, அந்தப்பெண்ணின் பெயருக்காகத்தான் அவரை காதலித்தார் என்பதால், அந்தப்பெயரில் இன்னொரு பெண்ணை சந்திக்கும்போது அவருக்கு காதல் ஏற்பட்டுவிடும்.

இந்நிலையில் கோப்பெருந்தேவியின் பெற்றோர் இந்த திருமணத்துக்கு சம்மதிப்பார்களா? தம்பிகளின் ரகசிய காதல்கள் நிறைவேறுமா? என்பதுதான் இந்தப்படத்தின் கதை. சந்தானம் சிறப்பான காமெடி செய்திருப்பார். இந்தப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 

கிராமத்து பாணியிலான கதை. சகோதரர்கள் பாசத்தை உணர்த்தும் படம். ஆக்சன் காட்சிகளும் சிறப்பாக இருக்கும். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் அருமையாக இருக்கும். இந்தப்படம் 58 கோடி ரூபாயை வசூல் செய்தது.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி