தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Dmk Alliance: திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்.. உத்தேச பட்டியலில் நிறைய தொகுதிகள் மாற்றம்.. முழு விபரம்!

DMK Alliance: திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்.. உத்தேச பட்டியலில் நிறைய தொகுதிகள் மாற்றம்.. முழு விபரம்!

Mar 11, 2024, 11:54 AM IST

திமுக கூட்டணியில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து இந்த முறை மாற்றம் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து இந்த முறை மாற்றம் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து இந்த முறை மாற்றம் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணி இறுதிசெய்யப்பட்டு, திமுக நேரடியாக 21 இடங்களிலும், கொங்கு மக்கள் கட்சி திமுக சின்னத்தில் நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட உள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்த நிலையில், போட்டியிடும் தொகுதிகள் பற்றி விபரம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் திமுகவில் நடந்து வரும் நேர்காணலின் அடிப்படையில் அங்கு நடந்த கருத்து பரிமாற்றங்களின் அடிப்படையில் சில தொகுதிகளை உத்தேசமாக அறிந்து கொள்ள முடிகிறது. அதன் படி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச தொகுதி பட்டியல் இதோ:

ட்ரெண்டிங் செய்திகள்

Cow Protection: ’மோடி மீண்டும் வென்றால் பசுவை கொலை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்’ பீகாரில் அமித்ஷா ஆவேசம்!

Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

Mamata Banerjee Vs Modi: ’பாஜக 200ஐ தாண்டாது! இந்தியா கூட்டணி 300ஐ தாண்டும்!’ அடித்து சொல்லும் மம்தா! இதுதான் காரணமாம்!

Modi: கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்!

எண்தொகுதி
1வடசென்னை
2மத்திய சென்னை
3தென் சென்னை
4ஸ்ரீபெரும்புதூர்
5நீலகிரி
6தூத்துக்குடி
7தஞ்சாவூர்
8ஈரோடு
9திருவண்ணாமலை
10சேலம்
11தர்மபுரி
12திருநெல்வேலி
13பொள்ளாச்சி
14அரக்கோணம்
15பெரம்பலூர்
16திண்டுக்கல்

காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்ட சில தொகுதிகளை இழக்கிறது. அதற்கு பதிலாக வேறு சில தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன் படி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக கூறப்படும் உத்தேச தொகுதிகள் பட்டியல் இதோ:

எண்தொகுதிகள்
1கன்னியாகுமரி
2சிவகங்கை
3கிருஷ்ணகிரி
4விருதுநகர்
5ஆரணி
6தென்காசி
7தேனி
8கோவை
9மயிலாடுதுறை

கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை மதுரை மற்றும் கடலூர் தொகுதிகள் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் சு.வெங்கடேசன் போட்டியிடும் நிலையில், கடலூரில் அக்கட்சியில் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகள் வழங்க வாய்ப்பு என கூறப்படுகிறது. 

எண்தொகுதி
1மதுரை
2கடலூர்

எண்தொகுதி
1நாகை
2திருப்பூர்

மதிமுகவுக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்ட திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. மதிமுக சார்பில் வைகோ மகன் துரை வையாபுரி போட்டியிட வாய்ப்பு.

எண்தொகுதி
1திருச்சி

இந்த பட்டியல் அனைத்தும் உத்தேச பட்டியல் மட்டுமே. இவை கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது. மேலும், தொகுதி பங்கீடுகள் எப்போதும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

அடுத்த செய்தி