தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Tn Lok Sabha Election 2024 Phase 1 Polling Live: தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவு
TN Lok Sabha election 2024 Phase 1 Polling Live: மக்களவைத் தேர்தல் 2024ன் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன்படி,ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. காலை முதல் ஓட்டுப் பதிவு தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.
TN Lok Sabha election 2024 Phase 1 Polling Live: மக்களவைத் தேர்தல் 2024ன் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன்படி,ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. காலை முதல் ஓட்டுப் பதிவு தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.

TN Lok Sabha election 2024 Phase 1 Polling Live: தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவு

Apr 19, 2024, 08:15 PM IST

TN Lok Sabha election 2024 Phase 1 Polling Live: மக்களவைத் தேர்தல் 2024ன் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன்படி,ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. காலை முதல் ஓட்டுப் பதிவு தொடர்பான அனைத்து செய்திகளையும் காணலாம்.

Apr 19, 2024, 07:41 PM IST

தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவு

மக்களவைத் தேர்தல் இரவு 7 மணி நிலவரம்: தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.69% வாக்குகள் பதிவு ஆகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவு ஆகியுள்ளது.

Apr 19, 2024, 06:53 PM IST

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரி குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தல்

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் வாக்காளர்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரியை, ஆட்சியரின் உத்தரவை ஏற்று, வாக்குச்சாவடியில் இருந்து காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.

Apr 19, 2024, 06:50 PM IST

திமுக - அமமுகவினர் இடையே வாக்குவாதம்

திமுக துண்டுடன் போடிநாயக்கனூரில் இருக்கும் வாக்குப்பதிவு மையத்தைப் பார்வையிட வந்த தங்கத்தமிழ்ச்செல்வனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமமுகவினர், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அது திமுக - அமமுகவினர் இடையே வாக்குவாதமாக மாறியது.

Apr 19, 2024, 06:03 PM IST

வாக்குப்பதிவு நிறைவு

வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இறுதியில் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Apr 19, 2024, 05:47 PM IST

தமிழ்நாட்டில் மாலை 5 மணிப்படி எவ்வளவு விழுக்காடு வாக்குகள் பதிவு ஆகியுள்ளது தெரியுமா?

தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 % வாக்குகள் பதிவு ஆகியுள்ளது.

Apr 19, 2024, 05:25 PM IST

விருதுநகரில் தேமுதிக வெல்லும் - விஜய பிரபாகரன்

விருதுநகர் பாராளுமன்றத்தொகுதியில் அதிமுக - தேமுதிக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறேன். சென்னையில் வாக்களித்துவிட்டு திருப்பரங்குன்றம் வந்ததும் அந்த ஊர் மக்கள் புன்னகையுடன் வரவேற்கின்றனர். அது நம்பிக்கை அளித்துள்ளது - விஜய பிரபாகரன்

Apr 19, 2024, 05:10 PM IST

வெயில் குறைந்தவுடன் வந்து வாக்களித்த பிரபலங்கள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து ஜெயம் ரவி தனது வாக்கினைச் செலுத்தினார். அதேபோல் நடிகை ஜனனி சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதேபோல் மனித நேய ஜனநாயக கட்சித்தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, சென்னை அரும்பாக்கத்தில் தனது வாக்கினைப்பதிவுசெய்தார்.

Apr 19, 2024, 05:07 PM IST

மூத்த குடிமக்கள் வாக்கினைப் பதிவுசெய்து ஜனநாயகக் கடமையை ஆற்றினர்

மதுரை தொகுதியில் 99 வயது மூதாட்டி லீலா, ஆம்புலன்ஸில் வந்து தனது வாக்கினைப் பதிவுசெய்தார். அதேபோல்,திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 100 வயது முதியவர் ஸ்டீபன், வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கினைப் பதிவுசெய்தார். மேலும் அவர் 1954ஆம் ஆண்டு முதல் வாக்களித்து வருவதாகத் தெரிவித்தார்.

Apr 19, 2024, 05:03 PM IST

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு

சென்னை திருவல்லிக்கேணி அரசு மாதிரி பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு எனப் புகார்; 5 பூத்கள் கொண்ட வாக்குச் சாவடியில் 2 பூத்களில் மட்டும் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதியது. இயந்திரக் கோளாறால் மந்தமாக வாக்குப்பதிவு நடப்பதாகப் புகார்.

Apr 19, 2024, 04:20 PM IST

பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை - நடிகர் சூரி

கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால், இந்த முறை தன்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். ஜனநாயகக் கடமையை ஆற்றமுடியவில்லை என வேதனையாகவுள்ளது. எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன் தயவுசெய்து அனைவரும் 100 விழுக்காடு வாக்களியுங்கள் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்

Apr 19, 2024, 04:15 PM IST

வாக்களித்த டிடிவி தினகரன்

 அமமுக பொதுச்செயலாளரும் தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளருமான டிடிவி தினகரன், சென்னை பெசன்ட் நகரில் வாக்களித்தார்.

Apr 19, 2024, 03:48 PM IST

நண்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் மதியம் மூன்று மணிநேர நிலவரப்படி 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86 விழுக்காடு வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக சென்னையில் 41.7 விழுக்காடு வாக்குப்பதிவும் நடந்துள்ளது.

Apr 19, 2024, 03:46 PM IST

நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் வடிவேலு தனது வாக்கினை செலுத்தினார். அதேபோல், நடிகர் ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா பாண்டியன், அதிதி சங்கர் ஆகியோர் தங்களது வாக்கினை செலுத்தினர்.

Apr 19, 2024, 03:26 PM IST

கோவை அருகே 830 வாக்குகளை காணவில்லை - பாஜகவினர் புகார்!

கோவை கவுண்டம்பாளையத்தில் 830 வாக்குகள் காணவில்லை என பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அங்கப்பா பள்ளி பூத் எண் 214ல், 523 ஓட்டு மட்டுமே உள்ளதாக பாஜகவினர் வாக்குவாதம். உள்ளாட்சித்தேர்தலில் 1353 வாக்குகள் இருந்தன. தற்போது, 523 வாக்குகள் மட்டுமே இருப்பதாகவும், மீதமுள்ளோரையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.

Apr 19, 2024, 03:11 PM IST

ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Apr 19, 2024, 03:04 PM IST

நல்ல தலைவர் வேண்டுமா ஓட்டுப்போடுங்க - யோகி பாபு

மக்களுக்கு நல்லது நடக்க நல்ல தலைவர் தேவை என்பதால் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் - வாக்களித்த பின்னர் நடிகர் யோகி பாபு பேட்டி

Apr 19, 2024, 03:02 PM IST

வல்லரசு ஆக வாக்களியுங்கள்! - எல்.முருகன்

வாக்களிக்க வேண்டியது நமது அனைவரின் கடமை. 2047இல் நாடு வல்லரசு ஆக வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் - நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் பேட்டி

Apr 19, 2024, 02:46 PM IST

ஓபிஎஸை தேடி ஈக்கள்தான் வரும் - செல்லூர் ராஜூ

பலாப்பழம் சின்னம் வைத்திருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை தேடி ஈக்கள் வேண்டுமானால் செல்லுமே தவிர அதிமுக தொண்டர்கள் செல்ல மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி உள்ளார்.

Apr 19, 2024, 02:23 PM IST

அதிமுக திருந்த வாய்ப்பாக அமையும் - சசிகலா

இந்த நாடாளுமன்றத் தேர்தல் தப்புக்கணக்கு போட்ட அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும் என வாக்களித்த பின்னர் சசிகலா பேட்டி 

Apr 19, 2024, 02:22 PM IST

குடும்பத்துடன் வாக்களித்த 90 பேர்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சிவகாசி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் ஒரே கூட்டு குடும்பமாக வசிக்கும் 90 பேர் ஒன்றாக சென்று மம்சாபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்

Apr 19, 2024, 01:38 PM IST

1 மணி நிலவரம் - தமிழ்நாட்டில் 39.43% வாக்குகள் பதிவு

பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 39.43 சதவீத வாக்குகள் பதிவாகி  உள்ளது

Apr 19, 2024, 01:37 PM IST

வேலூர்-39.58% வாக்குகள் பதிவு

பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி வேலூரில் 39.58 சதவீத வாக்குகள் பதிவு 

Apr 19, 2024, 01:36 PM IST

மயிலாடுதுறை - 40.50 % வாக்குகள் பதிவு 

பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி மயிலாடுதுறையில் 40.50 சதவீத வாக்குகள் பதிவு 

Apr 19, 2024, 01:36 PM IST

கள்ளக்குறிச்சி - 46.06 சதவீத வாக்குகள் பதிவு

பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் 46.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. 

Apr 19, 2024, 01:35 PM IST

அதிமுக டெபாசிட் கூட வாங்காது - ஹெச்.ராஜா

அதிமுகவால் பல இடங்களில் டெபாசிட் கூட வாங்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் வாக்கு சதவீதம் கூடி இருக்கிறது - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி

Apr 19, 2024, 01:33 PM IST

விஜய் சேதுபதி பேட்டி

ஓட்டுப்போடுவது அனைவரின் ஜனநாயகக் கடமை  என வாக்கு செலுத்திய பின்னர் நடிகர் விஜய்சேதுபதி பேட்டி

Apr 19, 2024, 01:31 PM IST

திமுக நிர்வாகியை அப்புறப்படுத்திய போலீஸ்

கோவை மாவட்டம் பி.என்.புதூரில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகியை போலீசார் அப்புறப்படுத்தினர்

Apr 19, 2024, 01:11 PM IST

தேர்தல் புறக்கணிப்பு - மக்களுடன் பேச்சுவார்த்தை!

பரந்தூர் விமான நிலையத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

Apr 19, 2024, 01:10 PM IST

வாக்களிக்க சென்ற மேலும் ஒருவர் உயிரிழப்பு

திருத்தணி அடுத்த நெமிலியை சேர்ந்த கனகராஜ் என்பவர் வாக்கு செலுத்த காத்திருந்தபோது உயிரிழப்பு 

Apr 19, 2024, 01:01 PM IST

சென்னையில் 20.1 விழுக்காடு வாக்குப்பதிவு

TN Lok Sabha election 2024: சென்னையில் 20.1 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apr 19, 2024, 12:59 PM IST

சசிகலா வாக்களித்தார்

சசிகலா சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Apr 19, 2024, 12:57 PM IST

நடிகர் விஜய் நீலாங்கரையில் வாக்களிப்பு

நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கட்சி தொடங்கிய பிறகு விஜய் முதல் முறையாக வாக்களித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Apr 19, 2024, 12:44 PM IST

102 வயது மூதாட்டி வாக்களிப்பு

102 வயது மூதாட்டி ஜெய்துன்பீ வாக்களித்து விழுப்புரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது கடமையை ஆற்றினார்.

Apr 19, 2024, 12:34 PM IST

நடிகர் சித்தார்த் வாக்களிப்பு

நடிகர் சித்தார்த் சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Apr 19, 2024, 12:23 PM IST

கடமையாற்றிய பஞ்சாப் கவர்னர்

TN Lok Sabha election 2024: பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாக்களித்தார்.

Apr 19, 2024, 12:15 PM IST

இயக்குநர் ஹரி மனைவியோடு வாக்களிப்பு

இயக்குநர் ஹரி தனது மனைவி பிரீத்தாவுடன் வந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Apr 19, 2024, 12:04 PM IST

TN Lok Sabha election 2024: வாக்குச்சாவடியில் மூதாட்டி மரணம்

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டியில் வாக்கு பதிவு செய்யும் இயந்திரத்திற்கு அழைத்து செல்லும் போது மூதாட்டி திடிரென மயங்கி விழுந்து வாக்குச்சாவடி மையத்திலே உயிரிழந்தார்.

Apr 19, 2024, 11:55 AM IST

இயக்குநர் டி. ராஜேந்தர் வாக்குகளித்தார்

TN Lok Sabha election 2024: நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர் சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Apr 19, 2024, 11:47 AM IST

தேர்தலை வேங்கைவயல் மக்கள் புறக்கணிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராம மக்கள் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை இல்லை எனக் கூறி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

Apr 19, 2024, 11:50 AM IST

Lok Sabha election 2024:  குடும்பத்தோடு வந்த நடிகர் குஷ்பு

இயக்குநர் சுந்தர் சி மற்றும் குஷ்பு தனது மகள்களுடன் வந்து சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

Apr 19, 2024, 11:31 AM IST

Lok Sabha election 2024: தேர்தல் புறக்கணிப்பு

தருமபுரி மாவட்டம் ஜோதிஹள்ளி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

Apr 19, 2024, 11:28 AM IST

Lok Sabha election 2024:  12.55 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Apr 19, 2024, 11:20 AM IST

Director Ameer: மதுரையில் அமீர் வாக்களித்தார்

Lok Sabha Election 2024: இயக்குநரும் நடிகருமான அமீர் மதுரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Apr 19, 2024, 11:13 AM IST

NTK Seeman: சீமான் வாக்களிப்பு

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Apr 19, 2024, 11:05 AM IST

Chennai Vote: மந்தமாக இருக்கும் சென்னை வாக்குப்பதிவு

Lok Sabha Election 2024: சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது. 3 தொகுதிகளில் 10 சதவீதம் வாக்குப்பதிவ செய்யப்பட்டுள்ளது.

Apr 19, 2024, 11:02 AM IST

Lok Sabha Election 2024: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வாக்களித்தார்

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வாக்களித்தார்.

Apr 19, 2024, 10:52 AM IST

Lok Sabha Election 2024 : விறுவிறுப்பாக வாக்களிக்கும் பிரபலங்கள் 

Lok Sabha Election 2024 : நீலாங்கரையில் வாக்களித்தால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் தனுஷ். அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது வாக்கை வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதிவு செய்தார்.

Apr 19, 2024, 10:51 AM IST

பரபரப்பாக வாக்களிக்கும் பிரபலங்கள் 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். தேனாம்பேட்டையில் ஒரு வாக்குச்சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி.  

Apr 19, 2024, 10:53 AM IST

Lok Sabha Election 2024 : வாக்களித்த கமல் 

Lok Sabha Election  2024 : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகர் கமலஹாசன். 

Apr 19, 2024, 10:22 AM IST

Lok Sabha Election 2024 : உங்கள் வாக்குச்சாவடியில் வரிசை நிலை அறியும் வசதி!

Lok Sabha Election 2024 : வாக்காளர்களின் வசதிக்காக மக்களவை தேர்தல்கள் 2024ன் வாக்குச்சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல்கள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியில் வரிசையை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ இணைப்பின் மூலம் அறிந்துகொள்ளும்.

Apr 19, 2024, 10:16 AM IST

Lok Sabha Election 2024 : வீரப்பன் மகள் - பாமகவினர் இடையே கடும் வாக்குவாதம்

Lok Sabha Election 2024 : சேலம் மேட்டூர் அருகே வாக்களிக்க வந்த கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வீரப்பனின் மகளுமான வித்யா ராணிக்கும், பாமக பிரமுகருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வித்யா ராணி உடன் அவரது ஆதரவாளர்களும் உள்ளே வந்ததற்கு பாமக பிரமுகர் கோவிந்தன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

Apr 19, 2024, 09:57 AM IST

Lok Sabha Election 2024 : மகள்களுடன் வந்து வாக்களித்த அன்புமணி ராமதாஸ்

Lok Sabha Election 2024 : மகள்களுடன் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Apr 19, 2024, 09:55 AM IST

Lok Sabha Election 2024 : வாக்களித்த தயாநிதி மாறன் 

Lok Sabha Election 2024 : குடும்பத்துடன் வாக்களித்த மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன். 

Apr 19, 2024, 09:40 AM IST

Lok Sabha Election 2024 : 12.55 சதவீத வாக்குப்பதிவு 

Lok Sabha Election 2024 : இன்று காலை முதல் பரபரப்பாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் தகவல்

Apr 19, 2024, 09:40 AM IST

Lok Sabha Election 2024 : 2026ல் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் - ஓ.பி.எஸ்

Lok Sabha Election 2024 : இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் இருக்கும். எடப்பாடி பழனிசாமி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. 2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என தேனி பெரியகுளத்தில் வாக்களித்த பாஜக கூட்டணியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

Apr 19, 2024, 09:41 AM IST

Lok Sabha Election 2024 : வாக்களித்தபின் முதலமைச்சர் ஸ்டாலின் டிவீட்

Lok Sabha Election 2024 : முதல் முறை வாக்களிப்பவர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்.  நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. எனவே தவறாமல் வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார். 

Apr 19, 2024, 09:27 AM IST

Lok Sabha Election 2024 : கீழ்பாக்கத்தில் விஜய்சேதுபதி!

Lok Sabha Election 2024 : சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் விஜய் சேதுபதி

Apr 19, 2024, 09:27 AM IST

Lok Sabha Election 2024 : தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்குவாதம் 

Lok Sabha Election 2024 : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் செல்போனை கொண்டு செல்லக் கூடாது என போலீசார் கூறியதால், அவர்களுடன் வாக்குவாதத்தில் வாக்காளர்கள் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Apr 19, 2024, 09:28 AM IST

Lok Sabha Election 2024 : இந்தியாவுக்கு வெற்றி - மு.க.ஸ்டாலின் 

Lok Sabha Election 2024 :சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரி வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னைப்போல் அனைவரும் வாக்களிக்கவேண்டும். வெற்றி இந்தியாவுக்குத்தான்.

Apr 19, 2024, 09:28 AM IST

Lok Sabha Election 2024 : டி.ஆர்.பி. ராஜா வாக்குப்பதிவு 

Lok Sabha Election 2024 : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடியில் தனது வாக்கை பதிவுசெய்தார். 

Apr 19, 2024, 09:28 AM IST

Lok Sabha Election 2024 : மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வாக்குப்பதிவு 

Lok Sabha Election 2024 :சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாக்களித்தார்.

Apr 19, 2024, 09:29 AM IST

Lok Sabha Election 2024 : அமைதியான வாக்குப்பதிவு – சத்யபிரதா சாகு!

Lok Sabha Election 2024 : அனைத்து இடங்களிலும் அமைதியான வாக்குப்பதிவு நடக்கிறது. சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனே அவை சரி செய்யப்பட்டன. மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை நெற்குன்றத்தில் வாக்களித்த பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Apr 19, 2024, 09:00 AM IST

Lok Sabha election 2024 : பெரம்பூரில் வாக்களித்த மேயர் பிரியா

Lok Sabha election 2024 : சென்னை மேயர் பிரியா பெரம்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Apr 19, 2024, 08:54 AM IST

Lok Sabha election 2024 : வாக்களித்த திமுக வேட்பாளர் கனிமொழி

 Lok Sabha election 2024 : செயின்ட் அப்பாஸ் பள்ளியில் திமுக வேட்பாளர் கனிமொழி வாக்களித்தார்.

Apr 19, 2024, 08:52 AM IST

Lok Sabha election 2024 : யமஹா RX 100யில் வந்து வாக்கு புதுச்சேரி முதலமைச்சர்

 Lok Sabha election 2024 : கிளாஸ்பேட்டை வாக்குச்சாவடிக்கு யமஹா RX 100-யில் வந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாக்களித்தார்

Apr 19, 2024, 08:49 AM IST

Lok Sabha election 2024 : மந்தைவெள்லிப்பாக்கத்தில் வாக்கு செலுத்திய குஷ்பு

Lok Sabha election 2024 : மந்தைவெள்லிப்பாக்கம் ராஜலட்சுமி மெட்ரிக் பள்ளியில் நடிகை குஷ்பு தனது வாக்கினை செலுத்தினார்.

Apr 19, 2024, 08:44 AM IST

Lok Sabha election 2024 : ஜனநாயக கடமையற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Lok Sabha election 2024 : வாக்குரிமை பெற்றிருக்கும் அனைவரும் ஜனநாயக கடமையற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டு உள்ளார்.

Apr 19, 2024, 08:39 AM IST

Lok Sabha election 2024 : வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Lok Sabha election 2024 : தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்களித்தார்.

Apr 19, 2024, 08:39 AM IST

Lok Sabha election 2024 : வாக்களிக்க வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Lok Sabha election 2024 :தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்களிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து உள்ளார்.

Apr 19, 2024, 08:39 AM IST

Lok Sabha election 2024 : மரகதாம்பிகை பள்ளியில் வாக்கு செலுத்திய அன்புமணி ராமதாஸ்

Lok Sabha election 2024 : திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார்.

Apr 19, 2024, 08:39 AM IST

Lok Sabha election 2024 : டி.டி.கே சாலையில் உள்ள பள்ளியில் வாக்கு செலுத்திய தனுஷ்

Lok Sabha election 2024 : சென்னை டி.டி.கே சாலையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ் தனது வாக்கினை செலுத்தினார்.

Apr 19, 2024, 08:24 AM IST

எல்லாரும் ஓட்டு போட வேண்டும் - ரஜினிகாந்த்

“வாக்குரிமை இருக்கும் அனைவருமே கட்டாயம் வந்து வாக்கு செலுத்த வேண்டும். வாக்கு செலுத்துவதிக் மரியாதை, கௌரவம் இருக்கிறது. தயவு செஞ்சி எல்லாரும் ஓட்டு போட வேண்டும்” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Apr 19, 2024, 08:23 AM IST

மாற்றம் வர வேண்டும் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

தமிழ் நாட்டில் மாற்றம் வர வேண்டும், நாடு செழிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்திய பிறகு கூறினார்.

Apr 19, 2024, 08:20 AM IST

மரகதாம்பிகையில் வாக்களித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளி வாக்குச்சாவடியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார்.

Apr 19, 2024, 08:18 AM IST

ஈக்காட்டுத்தாங்கலில் வாக்களித்த தங்கர் பச்சான்

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வாக்களித்தார்.

Apr 19, 2024, 08:13 AM IST

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்த ரஜினிகாந்த்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார்.

Apr 19, 2024, 08:11 AM IST

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு வருகை தந்த ரஜினிகாந்த்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்து உள்ளார்.

Apr 19, 2024, 08:09 AM IST

மக்களாட்சியின் அடித்தளமாம் நம் வாக்குரிமை - எடப்பாடி பழனிசாமி

”உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழாவாம் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் இன்று. மக்களாட்சியின் அடித்தளமாம் நம் வாக்குரிமையை நிலைநாட்டும் மகத்தான நாள் இன்று. நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, மக்களாட்சியின் விழுமியங்களைக் காத்திடும் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாள் இன்று. ஆதலால், அனைவரும் தவறாது தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு உள்ளார்.

Apr 19, 2024, 08:04 AM IST

வாக்களித்த தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை

தமிழக பாஜக தலைவரும், கோயம்புத்தூர் தொகுதியின் வேட்பாளருமான கே. அண்ணாமலை தனது வாக்கினை செலுத்தினார்.

Apr 19, 2024, 07:58 AM IST

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்த கார்த்திக்

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் கார்த்திக் வாக்களித்தார்.

Apr 19, 2024, 07:57 AM IST

திருச்சி கிராப்பட்டியில் வாக்கு இயந்திரம் பழது

திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் 214 ஆவது வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழது.

Apr 19, 2024, 07:55 AM IST

கோவை கணபதி பகுதியில் இயந்திர கோளாறு

கோவை கணபதி பகுதியில் உள்ள பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு உள்ளது.

Apr 19, 2024, 07:48 AM IST

4 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

திருச்சி கிராப்பட்டி, ஈரோடு, விழுப்புரம் கானைக்குப்பம், ஸ்ரீவைகுண்ட புகுக்குடி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளது.

Apr 19, 2024, 07:45 AM IST

நீலாங்கரையில் வாக்களித்த தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார்.

Apr 19, 2024, 07:43 AM IST

தயக்கம் இல்லாமல் வாக்களிக்க வேண்டாம் - தமிழிசை சவுந்தரராஜன்

”அனைவரும் தயக்கம் இல்லாமல் வந்து வாக்களிக்க வேண்டும். தயக்கம் இல்லாமல் முதல் முறை வாக்களிக்க வருபவர்கள் வர வேண்டும். நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

Apr 19, 2024, 07:39 AM IST

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளது.

Apr 19, 2024, 07:38 AM IST

மனைவியுடன் வாக்களித்த சரத்குமார்

திருவான்மியூரில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் சரத்குமார் மற்றும் ராதிகா வாக்களித்தனர்.

Apr 19, 2024, 07:34 AM IST

சாலிகிராமத்தில் வாக்களித்த தமிழிசை சௌந்தரராஜன்

தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

Apr 19, 2024, 07:31 AM IST

திருச்சியில் வாக்களித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது வாக்கை பதிவு செய்தார்.

Apr 19, 2024, 07:30 AM IST

சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்

நெல்லை தொகுதிக்குட்பட்ட ராதாபுரம் அருகே பெரியநாயகிபுரம் வாக்குச்சாவடி மையத்தில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்.

Apr 19, 2024, 07:27 AM IST

மனைவியுடன் வாக்களித்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றினார்.

Apr 19, 2024, 07:22 AM IST

கோடம்பாக்கத்தில் வாக்களித்த டி.ஆர்.பாலு

கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு  வாக்களித்தார்.

Apr 19, 2024, 07:21 AM IST

தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி

“2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

Apr 19, 2024, 07:16 AM IST

சிலுவம்பாளையம் ஊராட்சியில் வாக்களித்த  எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் எடப்பாடி பழனிசாமி வாக்களித்து சென்றார்.

Apr 19, 2024, 07:14 AM IST

வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை

காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் ஓட்டிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் உள்ள பூத் எண் 19 வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை என புகார்.

Apr 19, 2024, 07:12 AM IST

சிவகங்கை தொகுதியில் வாக்களித்த ப.சிதம்பரம்

சிவகங்கைக்கு தொகுதிக்குட்பட்ட கண்டவனூர் வாக்குச்சாவடியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார்.

Apr 19, 2024, 07:08 AM IST

13 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

வாக்காளர் அடையாள அட்டை உங்களிடம் இல்லையென்றால் பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டை, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டைகள் ஆகிய 13 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

Apr 19, 2024, 07:05 AM IST

Lok Sabha election 2024 : தொடங்கியது ஜனநாய திருவிழா.. முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார்  நடிகர் அஜித்! 

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: தமிழகத்தில் வாக்குபதிவு தற்போது (7 மணிக்கு ) தொடங்கி உள்ளது. திருவான்மியூரில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் தனது வாக்கை செலுத்தினார்

Apr 19, 2024, 06:59 AM IST

Lok Sabha election 2024 : ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது-பிரதமர் மோடி!

Lok Sabha election 2024 : 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Apr 19, 2024, 06:52 AM IST

Lok Sabha election 2024 : 15 நிமிடங்களுக்கு முன்பாகவாக்கு சாவடிக்கு வந்த அஜித்!

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: திருவான்மியூர் வாக்குசாவடிக்கு நடிகர் அஜித்குமார் வருகை தந்தார். 7 மணிக்கு வாக்கு பதிவு  தொடங்க உள்ள நிலையில் 15 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்கு சாவடிக்கு வந்துள்ளார் அஜித்.

Apr 19, 2024, 06:43 AM IST

Lok Sabha election 2024 : வாக்குச்சாவடிக்குள் செல்போனுக்கு தடை!

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: வாக்கு சாவடிக்குள் செல்போன் கொண்டு போக கூடாது என்றும் அதற்கு வெளியே செல்பி பாயிண்ட் உள்ளது என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தெரிவித்துள்ளார். 

Apr 19, 2024, 06:33 AM IST

Lok Sabha election 2024 : பதற்றமான வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை.. 3 அடுக்கு பாதுகாப்பு

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்ட 44 ஆயிரத்து 800 வாக்கு சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Apr 19, 2024, 06:26 AM IST

Lok Sabha election 2024 : தொடங்கியது மாதிரி வாக்குபதிவு 

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வாக்கு பதிவு நடைபெறும் நிலையில் தற்போது மாதிரி வாக்கு பதிவு தொடங்கி நடை பெற்று வருகிறது.

Apr 19, 2024, 06:16 AM IST

Lok Sabha election 2024: திருவாரூர் மாவட்டத்தில் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு!

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: திருவாரூரில் ஜிஆர்எம் பெண்கள் பள்ளியில் 139 வது பூத்தில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாதிரி வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 

Apr 19, 2024, 06:14 AM IST

Lok Sabha election 2024: தமிழக வாக்காளர் விபரங்கள் ! ஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண் வாக்காளர்கள்!

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை  3.06 கோடி, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை  3.17 கோடி 3ம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.  தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.

Apr 19, 2024, 06:00 AM IST

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் குறித்த விபரங்கள்!

Lok Sabha election 2024 : இன்றைய தேர்தலில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 3 முன்னாள் முதலமைச்சர்கள், நிதின் கட்காரி, கிரண் ரிஜிஜூ உள்பட 8 மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம், நகுல் நாத், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்பட பல்வேறு முக்கிய வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இன்று வாக்காளர்கள் முடிவு செய்ய காத்திருக்கின்றனர்.

Apr 19, 2024, 05:49 AM IST

Lok Sabha election 2024: தேர்தலை யொட்டில் மாற்று திறனாளிகளுக்கு இலவச பயணச்சீட்டு!

 Lok Sabha election 2024 Phase 1 Polling Live: இந்தியத் தேர்தல் ஆணையம், மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Apr 19, 2024, 05:34 AM IST

Lok Sabha election 2024: தமிழகத்தில் முதல் முறை வாக்களிப்போர் எண்ணிக்கை!

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: தமிழகத்தில் 18 முதல் 19 வயதிலான முதல் முறை வாக்களிப்போர் 10.92 லட்சம் பேர் உள்ளனர்.

Apr 19, 2024, 05:26 AM IST

Lok Sabha election 2024: இன்று முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெறும் இடங்கள்

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறும் இடங்கள் குறித்த முழு விபரம் தமிழ்நாடு-39 புதுச்சேரி -1 அருணாச்சல பிரதேசம் 2 அசாம் - 5 பீகார் - 4 சத்தீஷ்கர் - 1 மத்திய பிரதேசம் - 6 மகாராஷ்டிரா - 5 மணிப்பூர் - 2 மேகாலயா - 2 மிசோரம் - 1 நாகாலாந்து - 1 ராஜஸ்தான் - 12 சிக்கிம் - 1 திரிபுரா - 1 உத்தரபிரதேசம் - 8 உத்தரகாண்ட் - 5 மேற்கு வங்கம் - 3 அந்தமான் நிக்கோபார் - 1 காஷ்மீர் -1 லட்சத்தீவு-1

Apr 19, 2024, 05:18 AM IST

Lok Sabha election 2024: 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல்!

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: இந்தியாவில் கடந்த மாதம் 16ம் தேதி நாடாளுமன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19ந்தேதி (இன்று) நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி வரும் ஜூன் 1 ந் தேதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Apr 19, 2024, 05:38 AM IST

Lok Sabha election 2024 : அடுத்த பிரதமர் யார்?

Lok Sabha election 2024 Phase 1 Polling Live: இந்தியாவில் அடுத்த பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று

Apr 19, 2024, 05:38 AM IST

Lok Sabha election 2024: அறுவடை செய்யப் போவது யார்?

Lok Sabha election 2024 : மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறும் நிலையில், ஒரு மாத கால பிரசாரத்தில் கிடைத்த பலனாக, மக்கள் வாக்குகளை அள்ளப் போகும் கட்சி எது?

    பகிர்வு கட்டுரை