Annamalai: அண்ணாமலைதா வெற்றி பெற வேண்டும்.. கைவிரலை துண்டித்த பா.ஜ.க பிரமுகரால் பதற்றம் !!!
Apr 18, 2024, 03:04 PM IST
Annamalai: 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தேன். அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு வேதனையை கொடுத்தது. எனவே அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன் என்றார்.
Annamalai: கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என கை விரலை துண்டித்த பாஜக பிரமுகரால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். இவர் கடலூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைராக இருந்து வருகிறார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் அவர் ஆதரவு திரட்ட 10 நாட்கள் முன்பு கோவை வந்தார். கோவையில் தங்கி இருந்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார். நேற்று மாலை 5 மணி அளவில் இவர் பிரச்சாரத்தை முடித்தார். அப்பொழுது அவர் கோவை பகுதியில் அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து இடது கை ஆள்காட்டி விரலை திடீரென துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காயமடைந்த துரை ராமலிங்கத்தை மீட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
இது குறித்து துறையூர் ராமலிங்கம் கூறியதாவது,
நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன் . 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தேன். அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு வேதனையை கொடுத்தது. எனவே அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன் என்றார். அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா பிரமுகர் கைவிரலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் நாளை மறுதினம் (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
950 பேர் போட்டி:
தமிழகம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் களம் காண்கிறார்கள். தென் சென்னை தொகுதியில் அதிகபட்சமாக 5 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 6 தொகுதிகளில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
பிரச்சாரம் ஓய்ந்தது
தமிழ்நாட்டில் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தேர்தல் நடத்தை விதிகளின் படி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு, தொகுதிக்கு தொடர்பு இல்லாத அனைவரும் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமுறைகள் அமலில் இருக்கும்.
முதல்கட்ட வாக்குப்பதிவு:
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் பிரச்சாரம் நேற்று நிறைவடைந்த நிலையில் நாளை வாக்கு பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9