Lok Sabha Election 2024 Results: ராதிகாவை முந்திய கேப்டன் மகன்.. விருதுநகர், தென்காசி தொகுதியின் நிலவரம் இதுதான்!
Jun 04, 2024, 12:09 PM IST
Lok Sabha Election 2024 Results: விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கையின் தற்போதையை நிலவரப்படி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
விருதுநகர் மக்களவை தொகுதி (10 மணி நிலவரப்படி)
விஜய பிரபாகர் (தேமுதிக) - 6,532
மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) - 6,236
ராதிகா சரத்குமார் (பாஜக) - 2,553
கௌசிக் (நாம் தமிழர் கட்சி) - 1,615
விருதுநகர் மக்களவை தொகுதி (11 மணி நிலவரப்படி)
விஜய பிரபாகர் (தேமுதிக) - 46,500
மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) - 44,351
ராதிகா சரத்குமார் (பாஜக) - 18185
கௌசிக் (நாம் தமிழர் கட்சி) - 1,615
விருதுநகர் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை விட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 7,853 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜய பிரபாகரனும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும், இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர்.
தென்காசி மக்களவைத் தொகுதி
தென்காசி மக்களவைத் தனித் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனும் போட்டியிடுகிறார்கள். திமுக சார்பில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அரசு மருத்துவரான ராணி ஸ்ரீ குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தென்காசி மக்களவைத் தொகுதி தற்போதைய நிலவரம்
ராணி ஸ்ரீ குமார் (திமுக) - 36709
டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) - 21015
ஜான்பாண்டியன் (பாஜக)- 15393
இசை மதிவாணன் (நாம் தமிழர் கட்சி)- 12650
15694 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் டாக்டர். ராணி ஸ்ரீ குமார் முன்னிலை வகிக்கிறார்.
மக்களவைத் தேர்தல் 2024
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
களத்தில் 950 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடும் போட்டி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்