Lok Sabha Election 2024 Results: தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை
Jun 04, 2024, 04:31 PM IST
Lok Sabha Election 2024 Results: தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னணியில் இருந்தார். ஆனால் பிற்பகலில் 16ஆவது சுற்றுகள் முடிவுவில் திமுக வேட்பாளர் மணி முன்னிலை வகித்து வருகிறார்.
Lok Sabha Election 2024 Results: தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளது. பெரிதும் எதிர்பார்த்த அண்ணாமலை உள்ளிட்ட பாஜக அதிமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னணியில் இருந்தார். ஆனால் பிற்பகலில் 16ஆவது சுற்றுகள் முடிவுவில் திமுக வேட்பாளர் மணி சுமார் 3.21 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார்.
இதேபோல் விருதுநகரில் நடிகர் விஜயகாந்தின் மகன், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 2,46, 252 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்து வருகிறார். இதையடுத்து தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தல் 2024
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
களத்தில் 950 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவிற்கு வாய்ப்பு உள்ளதா?
இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை கோவையில் களம் காண்கிறார். அதேபோல் அக்கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தர் ராஜன் தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த நிலையில் தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு மத்திய சென்னையில் போட்டியிட்டார்.
எதிர்பார்ப்பில் மக்கள்
அடுத்த 5 ஆண்டுகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆட்சி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். உலகமே உற்று நோக்கும் இந்தியாவில் ஏற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா.. பிரதமர் மோடி 3 ஆவது முறையாக ஆட்சி அமைப்பாரா.. அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இணைந்துள்ள இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.
கடும் போட்டி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9