HT Yatra: எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார்.. தீவினைகளை அகற்றுவார்.. துணை நிற்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
Apr 06, 2024, 07:30 AM IST
Pillayarpatti Karpaga Vinayagar: அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். மரத்தடி தொடங்கி மலை உச்சி வரை அனைத்து இடங்களிலும் காட்சியளிக்க கூடியவர் இவர். விநாயகர் அமர்ந்து காட்சி அளிக்க கூடிய சிறப்பு மிகுந்த தலங்களில் ஒன்றுதான் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில்.
முழுமுதற் கடவுளாக விளங்க கூடியவர் விநாயகப் பெருமான். இந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் வணங்கக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கக் கூடியவர் விநாயகர். இவரை வணங்கி விட்டு தான் எந்த தெய்வத்தையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகமாகும். சிவபெருமான் பார்வதி இருவருக்கும் மூத்த மகனாக இவர் திகழ்ந்து வருகின்றார்.
சமீபத்திய புகைப்படம்
அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். மரத்தடி தொடங்கி மலை உச்சி வரை அனைத்து இடங்களிலும் காட்சியளிக்க கூடியவர் இவர். விநாயகர் அமர்ந்து காட்சி அளிக்க கூடிய சிறப்பு மிகுந்த தலங்களில் ஒன்றுதான் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில்.
தல பெருமை
விநாயகப் பெருமானுக்கு ஒரு சில இடங்களில் தேர் திருவிழா நடத்தப்படும் அப்படி வெகு விமர்சையாக நடத்தப்படும் ஒரு சில கோயில்களில் ஒன்றுதான் பிள்ளையார்பட்டி விநாயகர் திருக்கோயில். இந்த திருவிழா ஒன்பது நாள் விழாவாக நடைபெறும். மூலவருக்கு தேர் திருவிழா நடைபெறும் அதே சமயத்தில் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாற்றப்படும். இந்த அலங்கார காட்சியை காண்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக இந்த திருக்கோயிலில் கொண்டாடப்படும் உச்சிக்கால பூஜையின் போது 18 படி அளவு கொண்ட அரிசியால் செய்யப்பட்ட ஒரு மிகப்பெரிய கொழுக்கட்டை அவருக்கு நைவேத்தியம் செய்யப்படும். இது மிகவும் சிறப்பு பெற்றதாக கூறப்படுகிறது.
18 படி அரிசி, ஆறு படி கடலை பருப்பு, இரண்டு படி எள், 50 தேங்காய் ஒரு படி நெய், 40 கிலோ வெல்லம் என அனைத்தையும் ஒரே கலவையாக்கி ஒரு மிகப்பெரிய துணியில் கட்டி இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். இந்த மிகப்பெரிய கொழுக்கட்டையை அனைத்து பக்தர்களும் சேர்ந்து காவடி போல் தூக்கிச் செல்வார்கள். பின்னர் விநாயகர் சதுர்த்தி திருநாளில் உச்சிக்கால பூஜையின் போது நிவேதனம் செய்யப்படுகிறது.
முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல விநாயகருக்கும் ஆறுபடை வீடு உண்டு. இந்த கற்பக விநாயகர் திருக்கோயில் அவருடைய ஐந்தாவது படை வீடாகும்.
இந்த விநாயகரை வழிபட்டால் வினைகள் அனைத்தும் தீரும் எனக் கூறப்படுகிறது. கிரகங்களால் ஏற்பட்டு வந்த தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும் எனக் கூறப்படுகிறது. எதிரிகளிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு கற்பக விநாயகர் அருளைக் கொடுப்பார் என பக்தர்கள் கூறுகின்றனர்.
தல வரலாறு
தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்ந்துவரும் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளார். தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலில் இருக்கக்கூடிய சிற்பக் கூடத்தில் நந்தி மற்றும் விநாயகர் சிலையை செய்யும்படி ராஜராஜசோழன் கூறியுள்ளார்.
அதற்குப் பிறகு யானை வைத்து அந்த சிலைகளை எடுத்து வந்துள்ளார். திடீரென தேர் அச்சு முறிந்து விழுந்துள்ளது சிலையை கீழே வைத்து விட்டு பேரை சரி செய்துள்ளனர் பிறகு தேரை அசைக்கும் பொழுது அந்த தேர் அசையாமல் அங்கே நின்றுள்ளது. உடனே விநாயகர் தஞ்சை பெரிய கோயிலுக்கு வர விரும்பவில்லை எனக் கூறி இருக்கும் இடத்திலேயே ராஜராஜ சோழன் விநாயகர் சிலையை வைத்து கோயில் எழுப்பி உள்ளார்.
அதுதான் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில் என கூறப்படுகிறது. இந்த கற்பக விநாயகர் காவிரி பிறந்த குடகு மலையிலிருந்து எடுத்துவரப்பட்டது என ஒரு கதையும் உலவி வருகிறது.
அமைவிடம்
இந்த திருக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள், தங்குமிடம், உணவு விடுதிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9