HT Yatra: சிவனை சரணடைந்த தேவர்கள்.. தேவர்களுக்காக அசுரர்களை வதம் செய்த சிவபெருமான்.. சூரிய ஒளியில் அமரும்
May 04, 2024, 06:00 AM IST
HT Yatra: வரலாறு மிக்க சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் பாரியூர் அமரபணீஸ்வரர் திருக்கோயில். அந்த திருக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மனித இனம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ திருக்கோயில்கள் பல வரலாறுகளை தன்னுடன் வைத்து வாழ்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கோயில் கொண்டு சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சமீபத்திய புகைப்படம்
குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு என எண்ணிலடங்கா பல கோயில்கள் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிறப்பு சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று வரை வரலாறு தெரியாத எத்தனையோ கோயில்கள் பல காலநிலைகளைத் தாண்டி கம்பீரமாக நின்று வருகிறது.
அப்படிப்பட்ட வரலாறு மிக்க சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் பாரியூர் அமரபணீஸ்வரர் திருக்கோயில். அந்த திருக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தல பெருமை
இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சுவாமி என் மீது மார்ச் மாதத்தில் சூரியன் அஸ்தமனமாகும் போது இரண்டு நாட்கள் சூரிய ஒளி விழுவது மிகப்பெரிய சிறப்பாக பார்க்கப்படுகிறது அந்த வேலையில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஒளியானது சுவாமியின் பாணம் மீது முழுவதுமாக விழுகின்றது.
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை தேவர்களும் மற்றும் சூரிய பகவானும் அதிகாலை நேரத்தில் வழிபட்டு வருவதாக ஐதீகமாக கூறப்படுகிறது. இந்த திருக்கோயில் சூரிய உதயத்திற்கு பிறகு தான் திறக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு வரக்கூடியவர்கள் முதலில் சூரிய பகவானை வழிபட்டுவிட்டு அதற்குப் பிறகு சுவாமியை வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளனர்.
சூரிய பகவானை வழிபடும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. அப்படி வழங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தல வரலாறு
வித்யுன் மாலி, கமலாட்சன், தாரகன் ஆகிய மூன்று அசுரர்கள் தேவர்களை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். எவ்வளவு முயற்சி செய்தும் தேவர்களால் அசுரர்களை எதிர்த்து போராட முடியவில்லை. தஞ்சமடைய வழி தெரியாமல் அதற்கு பிறகு சிவபெருமானை நோக்கி சென்று சரணடைந்துள்ளனர்.
சிவபெருமானிடம் சென்றார் தேவர்கள் இந்த அசுரர்களிடமிருந்து தங்களை காத்தருளும்படி வேண்டி கேட்டுள்ளனர். உடனே சிவபெருமான் தன்னை நோக்கி அனைவரும் தவம் செய்தபடி இருங்கள் என கூறியுள்ளார். அதன் பிறகு தேவர்கள் இந்த இடத்திற்கு வந்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வழிபட்டுள்ளனர்.
தேவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான். தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்த அசுரர்களை வதம் செய்தார். தேவர்களுக்காக சிவபெருமான் அசுரர்களை அழித்த காரணத்தால் இவர் அமரபணீஸ்வரர் என பெயர் பெற்றார். அதற்குப் பிறகு தேவர்கள் அமரர்கள் என்ற பெயரையும் பெற்றனர்.
கோயில்
இந்த திருக்கோயில் முழுவதுமாக பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சூரிய பகவான் கிழக்கு பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சிவபெருமான் மற்றும் மீனாட்சி தேவி இருவரும் தனி சன்னதியில் அமர்ந்து அருள் பாலித்து வருகின்றனர்.
அமைவிடம்
இந்த திருக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் பாரியூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9