HT Yatra: நேரில் வந்த நாகம்.. லிங்கத்தில் சுற்றி வழிபாடு.. கைம்பெண்ணுக்கு காட்சி கொடுத்த நாகேஸ்வரர்
May 19, 2024, 05:51 AM IST
Arulmigu Nageswarar Temple: மன்னர்கள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்துவதற்காகவும், கடவுள் நம்பிக்கையை நிரூபிப்பதற்காகவும் பல சிவபெருமான் கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் பெரிய மணலி நாகேஸ்வரர் திருக்கோயில்.
உலகம் முழுவதும் மிகப் பெரிய பக்தர்கள் சாம்ராஜ்யத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். எண்ணிலடங்கா கோயில்களை சிவபெருமான் கொண்டுள்ளார். உலகத்தில் எத்தனை பிரிவுகள் எத்தனை கடவுள்கள் இருந்தாலும் உருவம் இல்லாமல் லிங்கத் திருமேனியாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.
சமீபத்திய புகைப்படம்
நமது நாட்டில் பல கோயில்கள் இருந்தவர்கள் இருப்பினும் சிவபெருமானுக்கு எத்தனையோ கோயில்கள் இருந்து வருகின்றன. சில சிவபெருமான் கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்று கூட தொழில்நுட்ப வளர்ந்த காலத்திலும் கண்டுபிடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறி வருகின்றனர்.
அந்த காலத்திலேயே கலை நுட்பத்தோடு பல ரகசிய வரலாற்றை உள்ளடக்கி பல சிறப்பான கோவில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்ப செய்யலாம் சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தெற்கு பகுதிகளை ஆண்ட மன்னர்கள் அனைவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் இருந்து வந்துள்ளார்.
அந்தந்த மன்னர்கள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்துவதற்காகவும், கடவுள் நம்பிக்கையை நிரூபிப்பதற்காகவும் பல சிவபெருமான் கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் பெரிய மணலி நாகேஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நாகேஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார். இந்த நாகேஸ்வரரை வழிபட்டால் நாக தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆக உள்ளது. குறிப்பாக திருமண யோகம் மற்றும் புத்திர பாக்கியம் உள்ளிட்ட வாழ்க்கையில் முக்கியமான பாக்கியத்தை நாகேஸ்வரர் கொடுப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
வேண்டுதல் நிறைவேறிய பிறகு பக்தர்கள் சுவாமிக்கு மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாந்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
இந்த திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருநாளில் நான்கு கால பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறுவது தனி சிறப்பாகும். இந்த நான்கு கால பூஜையை காண்பதற்காகவே சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலில் கூடுவார்கள்.
மூலவராக வீற்றிருக்கும் நாகேஸ்வரரை நாகம் நேரடியாக வந்து வழிபட்ட காரணத்தினால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என திருநாமம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலில் துர்க்கை அம்மன், கால பைரவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, கல்யாணசுப்பிரமணியர், சூரியன், சந்திரன் உள்ளிட்டோர் தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகின்றனர்.
தல வரலாறு
பாப்பாத்தி என்ற பெண் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்து வந்துள்ளார். கணவனை இழந்து விட்டு தனியாக காப்பாற்றி வாழ்ந்து வந்துள்ளார். இவர் தீவிர சிவ பக்தையாகத் திகழ்ந்து வந்துள்ளார்.
அதன் காரணமாக தினமும் சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பாப்பாத்தியின் பக்திக்கு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் நேரடியாக அவருக்கு திரு காட்சி கொடுத்துள்ளார்.
பக்தருக்கு காட்சி கொடுத்த பொழுது லிங்க திருமேனியிலிருந்து நாசம் ஒன்று வெளியே வந்து மீண்டும் சன்னதிக்குச் சென்று லிங்கத் திருமேனியை சுற்றியபடி காட்சி கொடுத்ததாக தல வரலாற்றில் கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9