HT Yatra: நிர்வாணமாக பால் கொடுத்த தாய்.. குழந்தைகளாக மாறியும் மும்மூர்த்திகள்.. அருள்மிகு அமணலிங்கேஸ்வரர்
Apr 13, 2024, 06:38 AM IST
சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில். இது திருக்கோயிலில் சிவபெருமான் விஷ்ணு பிரம்மா என மும்மூர்த்திகள் அனைவரும் சிறிய குன்றின் மீது சுயம்புவமாக அருள் பாலித்து வருகின்றனர்.
மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். இந்தியாவில் இவருக்கு பக்தர்கள் இல்லாத இடமே கிடையாது. அதேசமயம் இவர் கோயில் இல்லாத ஒரு இடத்தை கூட இந்தியாவில் காண முடியாது அனைத்து இடத்திலும் நீங்காமல் நிறைந்து இருப்பார் சிவபெருமான்.
சமீபத்திய புகைப்படம்
தமிழ்நாட்டில் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து சிவபெருமானுக்கு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் கட்டிய எத்தனையோ கோயில்கள் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில். இது திருக்கோயிலில் சிவபெருமான் விஷ்ணு பிரம்மா என மும்மூர்த்திகள் அனைவரும் சிறிய குன்றின் மீது சுயம்புவமாக அருள் பாலித்த வருகின்றனர்.
இது ஒரு குடவரைக் கோயிலாக திகழ்ந்து வருகின்றது. இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானின் திருநாமமானது சுந்தர கணபதி என அழைக்கப்படுகிறது. பாலசுப்பிரமணியனாக முருக பெருமான் காட்சி கொடுத்து வருகிறார். இந்த திருக்கோயிலில் அத்தகிரி மகரிஷி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
தல பெருமை
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு இருக்கக்கூடிய குளத்தில் நீராடி சப்த கன்னிமார்களை வழிபட்டு அதன் பிறகு மும்மூர்த்திகளை வழிபட்டால் கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு இருக்கக்கூடிய குளத்தில் நீராடி உப்பு மிளகு வாங்கி நோய் இருக்கும் இடத்தில் போட்டால் அது உடனே நீங்கி விடுவதாக கூறப்படுகிறது.
அத்திரி மகரிஷியின் மனைவி அம்மணமாக வந்து இங்கு வீற்றிருக்கக்கூடிய மும்மூர்த்திகளுக்கு உணவு அளித்து வழிபாடு செய்த காரணத்தினால் இந்த தளத்தில் இருக்கக்கூடியவர் அமணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகின்றார்.
மழையின் உச்சி மீது பஞ்சலிங்கம் அமைந்துள்ளது. இங்கு வாழ்ந்து வந்ததாக கூறப்படும் அத்திரி மகரிஷி மற்றும் அவரது மனைவி அனுசியா இருவரும் பஞ்சலிங்கத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் இன்றளவும் அவர்கள் வழிபட்டு வருவதாக நம்பப்பட்டு வருகிறது. இங்கு இருக்கக்கூடிய எட்டுக்கால் மண்டபத்தில் மும்மூர்த்திகளும் வந்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
தல வரலாறு
அகத்திய மாமுனிவர் இறைவனின் திருமண கோலத்தை பொதிகை மலையில் பார்த்தார். மீண்டும் அந்த கோலத்தை காண்பதற்கு ஆசைப்பட்டார் அகத்தியர். மீண்டும் இறைவன் சுட்டிக்காட்டிய இடம்தான் இந்த திருமூர்த்தி மலை. கைலாயத்தில் நடைபெற்ற இறைவனின் திருமணத்தை அகத்தியர் கண்டு களித்த இடமே பஞ்சலிங்கம் என அழைக்கப்படுகிறது. தனது திருமண காட்சியை இறைவன் அகத்தியருக்கு இங்கு காட்டியதால் இது தென் கைலாயம் என அழைக்கப்படுகிறது.
அத்திரி மகரிஷி மும்மூர்த்திகள் எனக்கு குழந்தைகளாக பிறக்க வேண்டும் என விருப்பப்பட்டார் அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவருடைய மனைவி அனுசுயாவின் கற்பை இந்த உலகிற்கு பறைசாற்றுவதற்காக பிரம்ம, விஷ்ணு, சிவபெருமான் மூவரும் இங்கு தோன்றினார்கள்.
ஒருமுறை அத்திரு மகரிஷி வெளியே சென்றுள்ளார் அப்போது மும்மூர்த்திகளும் அனுசியாவை தேடி வந்து தங்களுக்கு நீங்கள் நிர்வாணமாக பிச்சை இடவேண்டும் என கேட்டுள்ளனர். தனது கணவனை மனதார நினைத்துக் கொண்டு அவர்கள் மீது அனுசியை தீர்த்தத்தை தெளித்தார். உடனே மூவரும் குழந்தையாக மாறினார்கள். அதன் பின்னர் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நிர்வாணமாக மூன்று குழந்தைகளுக்கும் பாலூட்டினார். இந்த நிகழ்வு நடந்த இடம் தான் திருமூர்த்தி மலையாகும்.
அமைவிடம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை யில் இருந்து தெற்கு பகுதியில் 21 கிலோமீட்டர் தொலைவில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது இந்த மலையின் அடிவாரக் கோயிலில் இருந்து தென்மேற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றின் கரையில் அமணலிங்கேஸ்வரர் காட்சி கொடுத்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9