தர்ப்பணம் செய்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
Jun 28, 2022, 02:29 AM IST
ஆனி மாதம் அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும்.
ஆனி மாதம் சூரிய பகவான் மிதுன ராசியில் சஞ்சாரம் செய்யும் மாதமாகும். வரும் ஜூன் 28 தேதி அன்று அமாவாசை தினமாகும். அந்த மாதத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்பத்தில் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கஷ்டம் பண சிக்கல்கள் போன்ற அனைத்தும் நிவர்த்தி ஆகும்.
சமீபத்திய புகைப்படம்
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும். அதேபோல் வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும்.
முன்னோர்களுக்கு செய்யும் வழிபாடு, வரும் சந்ததிகளுக்கு நல்ல நன்மைகளைத் தேடித் தரும். ஆனி அமாவாசை அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு நீர்நிலைகள் அருகில் முன்னோர்களுக்கு வேதியரை வைத்து திதி கொடுக்க வேண்டும்.
அதாவது முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவதற்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் உள்ள பூஜை அறையில் முன்னோர்களுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்து உணவுகளை படைக்க வேண்டும்.
தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடைய பூசணிக்காய் வைத்து கற்பூரம் கொளுத்தி திருஷ்டி கழிக்க வேண்டும். அதேபோல் அமாவாசை தினத்தன்று காகங்களுக்கு உணவு படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது வேண்டுதல் முன்னோர்களால் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.