Palani Temple: பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா தொடக்கம்
May 27, 2023, 07:34 PM IST
பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது. 10 நாள்கள் வரை இந்த விழாவ நடைபெறவுள்ளது.
பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வைகாச விசாக பெருவிழா உள்ளது. இந்த திருவிழா பழனி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சமீபத்திய புகைப்படம்
இதையடுத்து இந்த விழாவானது இன்று காலை அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துகுமாரசாமிக்கு சோடஷ திரவ்ய பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது.
காலசந்தியின்ரபோது மூலவர், உற்சவர், விநாயகர், அஸ்த்ரதேவர் உள்பட தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதன் பின்னர் சேவல், மயில், பூஜை பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. திருக்கோயிலின் யானை கஸ்தூரி முன்னே செல்ல திருக்கொடி கோயிலை சுற்றி வலம் வந்த பின்னர் கொடிமண்டபம் கொண்டுவரப்பட்டது.
கொடிமண்டபத்தில் ஆறு கலசங்கள் வைக்கப்பட்டு மயூர யாகம் நடத்தப்பட்டு தங்க கொடிமரத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக வாத்ய பூஜைகளுடன் தேவாராம் திருமுறைப்பாடல்கள் பாடப்பட்ட பின் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தங்க கொடிமரத்துக்கு மா இலை, தர்ப்பை புல் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடத்தப்பட்டது.
10 நாள்கள் வரை நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் சாமி தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி யானை, கற்பக விருஷம், வெள்ள காமதேனு உள்பட பல வாகனங்களில் வீதி உலா எழுந்தருளுகிறார்.
ஜூன் 1 மாலை திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஜூன் 2 மாலை 4 மணிக்கு தேரோட்டம் நிகழ்வும் நடைபெறுகிறது.
திருவிழாவ நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டியம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
டாபிக்ஸ்