தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.26 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.26 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil

Nov 26, 2024, 05:00 AM IST

google News
மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு இன்று (நவம்பர் 26) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு இன்று (நவம்பர் 26) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு இன்று (நவம்பர் 26) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, நவம்பர் 26 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். 

சமீபத்திய புகைப்படம்

'தெத்தியடி ஆட்டம் ஆரம்பம்.. அச்சம் வேண்டாம்.. அதிர்ஷ்டம் வரும்.. இன்று நவ. 26 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள்!

Nov 26, 2024 05:00 AM

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு விடுமுறை தினமான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களே செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கமிஷன் பணிகளில் லாபம் அடைவீர்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசியினரே இன்று எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடங்களில் மாறுதல் ஏற்படும். பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். 

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வியாபார பயணங்களில் அனுகூலம் ஏற்படும். மறைமுகமான போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடகம்

கடக ராசியினரே எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் ஆதாயம் கிடைக்கும். புதுவிதமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும்.சொத்து விற்பனை சாதகமாக முடியும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். கருத்துக்களுக்கு மதிப்பு கிடைக்கும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். 

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே முயற்சிகளில் கவனம் வேண்டும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். 

கன்னி

கன்னி ராசியினரே இன்று சவாலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களால் நெருக்கடிகள் வரும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும்.  உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி