Madurai Koodal Alagar Temple: கோலகலமாக நடைபெற்ற மதுரை கூடழலகர் பொருமாள் கோயில் தேரோட்டம்
Jun 04, 2023, 07:01 AM IST
108 வைணவ தேசங்களில் 47வது தலமாக திகழும் மதுரை கூடல் நகர் அழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரை மையப்பகுதியான பெரிய பேருந்து நிலையம் அருகே கூடல்நகர் அழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 26ஆம் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவானது வரும் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9வது நாளில் நடைபெற்றது.
சமீபத்திய புகைப்படம்
இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தெற்கு மாசி வீதியில் காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜ பொருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 6.30 மணிக்கு தேரோட்டமானது தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரடியில் கிளம்பய தேர் தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, மேலமாசி வீதி வழியாக காலை 9 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு முக்கிய சாலைகளில் மாற்றம் செய்யப்பட்டதுடன், சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
தேரோட்டம் நிகழ்வை தொடர்ந்து திருத்தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி, குதிரை வாகனம் பெருமாள் புறப்படும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பின்னர் கருட வாகன புறப்பாடு, இறுதி நிகழ்வாக 8ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழாவானது நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
டாபிக்ஸ்