கும்பம் ராசிக்கு செல்லும் சுக்கிர பகவான்..புத்தாண்டின் தொடக்கமே தட்டித் தூக்கப் போகும் 3 ராசிகள்!
Nov 27, 2024, 06:39 PM IST
வரும் டிசம்பர் மாதம் கும்ப ராசிக்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக ஆண்டின் இறுதியில் இது நிகழ்வதால், புத்தாண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இவர் அழகு, செல்வம், காதல், ஆடம்பரம், லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அதிபதியாகவும் அறியப்படுகிறார். சுக்கிரனை பொறுத்தவரை 26 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுவார். சுக்கிரன் ராசியை மாற்றும்போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்தவகையில், 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் சுக்கிரன் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார்.
சமீபத்திய புகைப்படம்
அதன்படி, டிசம்பர் மாதத்தில் சுக்கிரன், மகரம் மற்றும் கும்பம் ராசியில் நுழைகிறார். முதலாவதாக சுக்கிரன் டிசம்பர் 2 ஆம் தேதி சனி பகவானின் ராசியான மகர ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பிறகு டிசம்பர் 28 ஆம் தேதி கும்பம் ராசிக்கு செல்லவுள்ளார். இந்த டிசம்பர் மாதம் கும்ப ராசிக்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக ஆண்டின் இறுதியில் இது நிகழ்வதால், புத்தாண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்
சுக்கிரனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்கும். உங்கள் நீண்டகால சுகாதார பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளது. நாட்கள் செல்லச் செல்ல நீங்கள் விரும்பிய பணிகள் நிறைவேறும். குடும்ப பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தீர்வுகளும் எளிதாகிவிடும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். நீண்ட தூரப் பயணங்கள், உறவினர்களைச் சந்திப்பது, சுற்றுப்பயணங்கள் போன்ற நடவடிக்கைகளில் நீங்கள் பங்கேற்கலாம். வங்கி, முதலீடு, காப்பீடு மற்றும் பிற லாபகரமான துறைகளில் உள்ளவர்கள் அதிக நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.
சிம்மம்
சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண பந்தம் கைகூடும் வாய்ப்புள்ளது. சுக்கிர பெயர்ச்சியால் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும் சூழல் உள்ளது. குடும்பத்தில் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் லாபகரமான முதலீடுகள் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். நீங்கள் ஒரு ஊழியராக இருந்தால், உங்கள் அலுவலகத்தில் நல்ல பாராட்டுக்களை பெறுவீர்கள்.
கும்பம்
இரண்டு முறை சுக்கிரனின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். பணம் தேவைப்படும் போதெல்லாம் பணம் உங்களை வந்தடையும். உங்கள் நாட்கள் எந்த நிதி சிரமங்களும் இல்லாமல் லாபகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் விரும்பும் வேலை எந்த இடையூறும் பதற்றமும் இல்லாமல் சீராக நடைபெறும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்