தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Palani Thaipusam: கொடியேற்றத்துடன் தொடங்கியது பழனி தைப்பூசத் திருவிழா!

Palani Thaipusam: கொடியேற்றத்துடன் தொடங்கியது பழனி தைப்பூசத் திருவிழா!

Divya Sekar HT Tamil

Jan 29, 2023, 12:27 PM IST

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவின் போது ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருவார்கள்.இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பழனிக்கு முருகப்பெருமானைத் தரிசனம் செய்ய வருவார்கள்.

சமீபத்திய புகைப்படம்

Lucky Rasis : இன்று முதல் சுக்கிரன் கொண்டுவரும் எக்கச்சக்க நற்பலன்கள்! யாருக்கெல்லாம் அடிக்கப்போகிறது லக் பாருங்கள்!

May 19, 2024 09:51 AM

Today Rasi Palan : ‘பணம் கொட்ட காத்திருக்கு.. நிம்மதியான வாழ்க்கை யாருக்கு’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்!

May 19, 2024 04:30 AM

போச்சு புதன் வந்துட்டார்.. மே மாதம் முழுக்க பணமழை தான்.. உங்க ராசிக்கு கொட்டுது யோகம்

May 18, 2024 02:53 PM

உங்க ராசியில் கொடியேற்ற போகிறார் சுக்கிரன்.. இனிமே ஜாலிதான்.. இந்த ராசியை கையில பிடிக்க முடியாது

May 18, 2024 02:45 PM

சூரியனின் பண வெயிலில் காயப் போகும் ராசிகள்.. அக்னியாக கொட்டும் ராஜயோகம்.. வருகிறது அதிர்ஷ்டம்

May 18, 2024 02:06 PM

கண்ணில் கத்தி வீசப்போகும் செவ்வாய்.. கதறி கொட்டும் ராசிகள்.. சிக்கினால் சிதைவது உறுதி

May 18, 2024 10:43 AM

இந்நிலையில் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஜன 29) தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை‌ 9.30 மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம்நாள் திருவிழாவான பிப்ரவரி 3ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித்தேரோட்டமும், பிப்ரவரி 4ஆம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது.

இன்று முதல் தினமும் அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணைஆணையர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பழனி தைப்பூசத் திருவிழா

வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக பழனி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி