’பூர்வீக சொத்துக்கள் தேடிவரும்! காதல் திருமணம் நடக்கும்’ மேஷம் ராசிக்கான சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
Nov 14, 2024, 06:50 AM IST
மேஷம் ராசிக்கு 2ஆம் அதிபதியான சுக்கிரன் 9ஆம் இடத்திற்கு இடம் பெற உள்ளார். ஒரு மனிதனுக்கு நீடித்த இன்பம் தரும் இடமாக 2 மற்றும் 9ஆம் இடங்களில் உள்ளது. பரிவர்தனை யோகம் காரணமாக புதிய சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.
நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சமீபத்திய புகைப்படம்
பரிவர்தனை யோகம்
விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
பூர்வீக சொத்து பிரச்னைகள் தீரும்
மேஷம் ராசிக்கு 2ஆம் அதிபதியான சுக்கிரன் 9ஆம் இடத்திற்கு இடம் பெற உள்ளார். ஒரு மனிதனுக்கு நீடித்த இன்பம் தரும் இடமாக 2 மற்றும் 9ஆம் இடங்களில் உள்ளது. பரிவர்தனை யோகம் காரணமாக புதிய சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள். வேலைகளில் மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலையில் உள்ள சம்பள உயர்வு, பதவி உயர்வு தேடி வரும். பூராடம் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் வரும் பொது வருமானம் சிறக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் நன்மைகளை தரும். சிலருக்கு காதல் திருமணம் கைக்கூடும்.
கணவன் மனைவி உறவில் கவனம் தேவை
சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு செய்வார்கள். உணவுத்தொழிலில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து வெற்றிகள் கிடைக்கும். நீண்டகாலமாக தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். கணவன் - மனைவிக்கு இடையே பிரச்னைகள் துளிர்க்கலாம். பணப்பரிவர்தனை விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.