Tiruchendur Temple: சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் உயர்வு - இன்று முதல் அமல்!
Mar 27, 2023, 07:01 AM IST
சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் ரூபாய் 1500லிருந்து 5000 என உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று(மார்ச் 27) முதல் கோயில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது.
அறுபடை வீடுகளில் மிகவும் சிறப்பு மிக்க கோயிலாகத் திகழ்ந்து வருவதைத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இது இரண்டாம் படை வீடாகும். உலகம் முடிவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வார்கள். தென்னிந்தியப் பகுதிகளில் இருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து இந்த கோயிலுக்கு வந்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.
சமீபத்திய புகைப்படம்
சமுத்திரத்தின் அருகே இந்த கோயில் அமைந்திருப்பதால் இது மேலும் சிறப்பாகும். என் நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர் கார்த்திக் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் சண்முகார்ச்சனையின் கட்டணமாக ரூபாய் 1500 வசூலிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக தற்போதைய சூழ்நிலை மற்றும் விலைவாசி ஏற்றத்தின் காரணமாகக் கோயில் மூலம் சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் ரூபாய் 5000 ஆக உயர்த்தி சட்ட விதிகளின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து ஆட்சேபனை ஏதும் வராத காரணத்தினால் கோயில் அறங்காவலர் குழு சுற்றுத் தீர்மானத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்த ஆணையின்படி கோயில் மூலம் சண்முகார்ச்சனை செய்யக் கட்டணம் ரூபாய் 1500லிருந்து 5000 என உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று(மார்ச் 27) முதல் கோயில் நிர்வாகத்தால் அமல்படுத்தப்படுகிறது.
எனவே பக்தர்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூபாய் 5000 கட்டணத்தைச் செலுத்தி சண்முகார்ச்சனை நேர்த்திக் கடனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்