தனுசு ராசி பெண்களே! உங்கள் காதல் எந்த ராசியில் உள்ளது தெரியுமா?
Mar 08, 2022, 05:29 PM IST
அன்பை எதிர்பார்க்கும் தனுசு ராசிப் பெண்களுக்கு, இணக்கமான ராசிகளை குறித்து இங்கு காணலாம்.
ராசி பட்டியலில் ஒன்பதாவது ஜோதிட அடையாளமான தனுசு ராசி இயற்கையாகவே மிகவும் சாகசக்காரர் என்று அறியப்படுகிறது. இருப்பினும், காதல் மற்றும் உறவுகள் என்று வரும்போது, தனுசு ராசிப் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை விரும்புவதால், மற்ற ராசிகளுடன் பொருந்தும் போது சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
சமீபத்திய புகைப்படம்
இறுதியில், உங்கள் பாதுகாப்பற்ற சிந்தனையை நீங்கள் ஒதுக்கி வைக்காத வரையில், உங்களது சரியான துணையை கண்டுபிடிக்க முடியாது.
ஆதிக்கம் செலுத்தும் கூட்டாளருடனான உறவில் நீங்கள் திசைதிருப்பப்பட்டு தொந்தரவு செய்யப்படுவதாகத் தெரிகிறது. இருப்பினும், உங்களை உண்மையிலேயே அன்பில் பிரகாசமாக்குவது உங்கள் செயல் சார்ந்த ஆளுமை தான்.
காதல் துணையாக தனுசு ராசி பெண்
நீங்கள் கேட்க விரும்பும் விஷயங்களை தனுசு ராசி பெண் சொல்வார் என்று எதிர்பார்க்காதீர்கள். திடீரென்று அவர் மிகவும் விசேஷமான ஒன்றைச் சொல்வார். அதானல் நீங்கள் வெட்கப்பட நேரிடும்.
தனுசு பெண்கள் வழக்கமாகவே அதிகப்படியான மகிழ்ச்சியுடைய குணாதிசயம் கொண்டவர்கள். அவர் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார். ஆனால் மிகவும் கோப குணம் கொண்டவர். தனுசு ராசி பெண்கள் ஒரு நம்பிக்கையான குழந்தை.
தனுசு ராசி பெண்ணுக்கு உகந்த காதல் பொருத்தம்
தனுசு ராசி பெண்ணுடன் மேஷம் ராசி
தனுசு ராசி பெண்கள் மற்றும் மேஷம் ராசி ஆண்கள், சொர்க்கத்தில் செய்யப்பட்ட ஒரு பொருத்தம். அவர்கள் இருவரும் ஆரோக்கியமான சமூக வாழ்க்கையை அனுபவிக்கும் மற்றும் தங்கள் வாழ்க்கையில் வழங்கப்படும் சாகசங்களை வரவேற்கும், கேளிக்கை விரும்பிகள்.
உங்கள் கூட்டணி மகிழ்ச்சியும் நிறைவும் நிறைந்ததாக இருக்கும். உங்கள் அந்தந்த அட்டவணையில் மிகவும் பொதுவான பண்பு வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நம்பிக்கையுடன் இருப்பது. உங்கள் காதல் பொருத்தம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
தனுசு ராசி பெண் மற்றும் கும்பம் ராசி ஆண்
இந்த ராசிகளின் கீழ் வரும் தம்பதிகள், தங்கள் சொந்த வழிகளில் மிகவும் தனித்துவமானவர்கள். இருப்பினும், இரு ராசிக்காரர்களும் பரஸ்பர பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இது அவர்களின் காதல் உறவை வலுவாகவும் இணக்கமாகவும் மாற்றும். நீங்கள் இருவரும் சுறுசுறுப்பான மற்றும் புதுமையான நெருக்கத்தை அனுபவிக்க முனைவதால், உங்கள் குடும்ப உறவு இணக்கமானதாக இருக்கும்.
தனுசு ராசி பெண்ணுடன் சிம்ம ஆண் ராசி
உங்கள் இருவருக்கும், இலக்கு, நாடகம், காதலில் சுதந்திரம் போன்றவற்றில் விருப்பம் இருப்பது போல் தெரிகிறது. இதுவே நீங்கள் ஒரு இணக்கமான உறவைத் தொடங்குவதற்கான பொதுவான தளத்தை உருவாக்குகிறது.
நீங்கள் இருவரும் அன்பையும் வாழ்க்கையையும், சம மரியாதையையும் சமநிலைப்படுத்த முனைகிறீர்கள். இது உங்கள் கூட்டணியை எல்லா வகையிலும் அன்பின் தருணமாக மாற்றுகிறது.