Sabarimala Ayyappa Temple: புரட்டாசி மாத பூஜை..சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
Sep 17, 2023, 06:00 AM IST
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (செப்.17) மாலை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த விழாக் காலங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
சமீபத்திய புகைப்படம்
அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதம் மற்றும் மலையாள மாத பிறப்பின் போதும் முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைக்காக இன்று (செப்டம்பர் 17) மாலை நடை திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். இதனை தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோயில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.
பின்னர், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த 5 நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.
வரும் 22ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்